சுகாதார சமையல் குறிப்புகள் மசெக மூத்தோர் குழு சுகாதார

சமையல் குறிப்புகளை மின் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது. மசெக வில் மூத்தோர் பிரச்சினைகளைக் கவனித்து ஆலோசனை வழங்கும் அக்குழு மூத்தோரிடையே சுகாதார மான வாழ்க்கை முறையை ஊக்கு விக்கிறது. மக்கள் செயல் கட்சித் தொண் டர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் களும் சுகாதார சமையல் குறிப்பு களை வழங்கி உள்ளனர். அவை ஒரு தொகுப்பாக தமிழ், ஆங்கிலம், மலாய், மாண்டரின் ஆகிய மொழி களில் கிடைக்கும். ‘PAP.SG’ யின் இணையத்தளத்தில் இப்புத்தகத் தைப் பதிவிறக்கம் செய்யலாம். அரிசிக் கஞ்சியில் வெட்டப் பட்ட மீன் துண்டுகளைப் போட்டுத் தயாரிக்கப்பட்ட வித்தியாசமான சமையல் குறிப்பை ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் வழங்கி இருக் கிறார்.

நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப்பின் சமையல் குறிப்பு ஒன்றும் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. காய்கறிகளைக் கொண்டு தயா ரிக்கப்பட்ட கொழுப்பு குறைந்த கறி அது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற முக்கிய நாட் களில் அவர் தமது குடும்ப உறுப் பினர்களுக்கு இந்தக் கறியைச் சமைப்பதாகக் குறிப்பிட்டார். தேங் காய்ப் பாலுக்குப் பதில் தேங்காய் தண்ணீர், சோயா பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஆகிய வற்றைப் பயன்படுத்தினால் சமை யலில் கொழுப்பின் அளவு குறை யும் என்பது அவரது ஆலோசனை. சுகாதாரத்தில் கவனம் செலுத் தும் மூத்த சிங்கப்பூரர் ஒவ்வொரு வராலும் தங்கள் இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவு முறையில் மாற்றம் செய்து சிறியதொரு அமைதிப் புரட்சியைத் தொடங்க இயலும் என்று கூறினார் மசெக மூத்தோர் குழுவின் தலைவருமான திருவாட்டி ஹலிமா.

சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட புலாவ் சோற்றை ருசி பார்த்த பிரதமர் லீ சியன் லூங், பிரமாதம் என்று சைகை காட்டினார். (இடமிருந்து) ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லில்லி நியோ, நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ, அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினர் டேரல் டேவிட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே