சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் பொங்கல் பண்டிகை

வில்சன் சைலஸ்

சிலம்பாட்டம், கோலாட்டம் ஆகிய பாரம்பரிய நடனங்களுடன் உறுமி மேள இசை தொனிக்க பொங்கோல் சமூக மன்றத்தில் பொங்கல் கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை களைகட்டியது. வண்ணமயமான பாரம்பரிய உடைகளில் வந்திருந்த பிடோக் ரிசர்வோர் - பொங்கோல் குடியிருப் பாளர்கள், கம்பத்து சூழலில் இவ்வாண்டு பொங்கல் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கோல் இந்திய நற்பணி செயற்குழுவால் நேற்று முன் தினம் மாலை சுமார் 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட் டத்தில் பிற இனத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் பங்கேற்று தங்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தைக் குடியிருப் பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க் கின்றனர் என்று கூறிய பொங்கல் விழா ஏற்பாட்டு குழுவின் தலைவர் திரு திருமாவளவன் அழகப்பன், 500க்கும் மேற்பட்டோர் இம்முறை கொண்டாட்டத்தில் பங்கேற்றனர் என்றார். "கடந்த 2010ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தபோது அதிகபட்சம் 40 பேர் வருவார்கள்.

பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் வர்த்தக, தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரனுடன் அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்பு ஆலோசகர் திரு விக்டர் லாயும் பங்கேற்று போடப்படிருந்த ரங்கோலியை நிறைவு செய்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!