தைப்பூசத் திருநாளில் பக்திப் பெருமழை

சுதாஸகி ராமன்

யாஸ்மின் பேகம்

தைப்பூசத் திருநாளன்று காவடி எடுக்கவேண்டும் என்று பெரிதும் விரும்பினார் 44 வயதான திரு கணேசன் குணசேகரனின் தந்தை யார். ஆனால், அந்த ஆசை நிறை வேறுவதற்கு முன்னரே அவர் காலமாகிப் போனார். ஆயினும், தந்தைக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லை, தன் மூலமாவது அவரது ஆசை நிறைவேறட்டும் என்று எண்ணி கடந்த இரு ஆண்டுகளாகக் காவடி எடுத்து வருகிறார் திரு கணேசன் குணசேகரன். "ஐந்து அலகுகளுடன் கூடிய காவடி எடுக்கவேண்டும் என்று என் தந்தையார் விரும்பினார். அதே வகையில் இரண்டாவது ஆண்டாக நான் அலகுக் காவடி எடுத்து வருகிறேன். வரும் ஆண்டு களிலும் இதைத் தொடர்வேன்," என்றார் அவர். வழக்கம்போல இவ்வாண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவில் பங்கேற்று பால் குடம், காவடி சுமந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச விழாவில் கலந்துகொண்டு இறைவனை வழிபடும் (இடமிருந்து) மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெனிஸ் புவா, நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங், இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ஆர். ஜெயச்சந்திரன், கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங். படங்கள்: திமத்தி டேவிட்

மேல் விவரம்: நேற்றைய தமிழ்முரசின் இ.பேப்பரைப் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!