50வது போர் நினைவஞ்சலி

உலகப் போர்களிலும் அதனைத் தொடர்ந்து நடந்த போர்களிலும் உயிரிழந்தவர்களுக்காக நேற்று 50வது போர் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கப்பூரை ஜப்பான் ஆக்கிர மித்தபோது கொல்லப்பட்ட குடிமக் களை நினைவுகூர்ந்து அவர் களுக்கு அஞ்சலி செலுத்துவதற் காக சிங்கப்பூர் சீன வர்த்தகத் தொழில் சபை ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் 1,200 பேர் கலந்துகொண்டனர். பீச் ரோட்டில் உள்ள போர் நினைவுப் பூங்காவில் உள்ள 67 மீட்டர் உயரமான போர் நினைவுச் சின்னத்தில் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் சமய அமைப்பு களின் பேராளர்களும் மரியாதை செலுத்தினர்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நிகழ்ச்சி யின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். "உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பா னிய ராணுவத்திடம் வீழ்ச்சி கண்டு 75 ஆண்டுகள் ஆகின் றன. இந்த ஆண்டு 50வது போர் நினைவஞ்சலி ஆண்டாகவும் இருக்கிறது. நேற்றைய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் களில் எங் யோங் ஃபூ, 81, என் பவர் ஒருவர். இவர் ஆண்டுதோறும் போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்.

போர் நினைவுப் பூங்காவில் நேற்று நடந்த 50வது போர் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பள்ளிச் சீருடைக் குழுவினர் அஞ்சலி செலுத்துகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!