உட்லே ரயில் நிலையம் மூன்று மணி நேரம் மூடப்பட்டு சோதனை; 69 வயது ஆடவர் கைது

உட்லே எம்ஆர்டி நிலையம் நேற்று பிற்பகலில் ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது. சந்தேகம் தரும் வகையிலான வெள்ளை நிறத் தூள் அந்த ரயில் நிலையத்தில் காணப்பட்டதே அதற்குக் கார ணம். அதனால் பிற்பகல் 1.25 மணிக்கு அந்நிலையம் தற்காலி கமாக மூடப்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அபாயகர சாதனங் களுக்கான குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக் காக அது மூடப்படுவதாக அந்த நிலையத்தில் வடக்கு=கிழக்கு ரயில் போக்குவரத்தை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட் அறிவிப்பு வெளியிட்டது. அதனால் ஏற்பட்ட சிரமங் களைக் குறைக்கும் வகையில் சிராங்கூன்=பொத்தோங் பாசிர் நிலையங்களுகக்கு இடையில் இலவசப் பேருந்துகளை எஸ்பிஎஸ் டிரான்சிட் இயக்கியது. சமூக ஊடகங்கள் மூலம் நிலவரத்தை அவ்வப்போது விளக்கிய போலிஸ் இச்சம்பவம் குறித்து தங்களது கற்பனைக் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்று பொது மக்களைக் கேட்டுக்கொண்டது.

வெள்ளை நிறத் தூளை ஆய்வு செய்யும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் சிறப்புக் குழு அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!