தமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை

இந்தியாவின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப முன்னதாகவே திட்டமிடவும் மத்திய அரசின் திட்டச் செலவீனங்களைப் பரிந்துரைக்கவும் ‘நிதி ஆயோக்’ என்ற பெயரில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள திட்ட ஆணைக்குழு அண்மையில் அபாயச் சங்கு ஊதியது.

இந்த பூமியில் உள்ள குடிநீர் வளத்தில் 4% மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. இந்திய மக்களில் 16 விழுக்காட்டினருக்கு மட்டுமே அது போதுமானது. உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி எடுக்கும் நாடு இந்தியாதான்.

சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைத ராபாத் உள்ளிட்ட 21 நகர்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் இருக்காது. 2030ல் இந்தியாவில் 40% மக்களுக்குக் குடிக்க தண்ணீர் இருக்காது என்று அந்த அமைப்பு எச்சரித்து உள்ளது.

உலகிலேயே ஆக அதிக மழையைப் பெறும் சிரபூஞ்சி என்ற இடமும் அதற்கு நேர்மாறான பாலைவனமும் இந்தியாவில் உண்டு. வற்றாத ஜீவநதிகளைக் கொண்ட பகுதிகளும் போதிய அளவுக்கு நீர்வளமற்ற தமிழ்நாடு போன்ற மழையையே நம்பி இருக்கும் மாநிலங் களும் அங்கு இருக்கின்றன.

நீண்ட கடற்கரையைக் கொண்ட தென் கோடி மாநிலமான தமிழ்நாடு, ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 945 மிமீ. மழையைப் பெறுகிறது. இதில் வடகிழக்கு பருவக்காற்று மூலம் 48%, தென்மேற்குப் பருவக்காற்று மூலம் 32% மழை கிடைக்கிறது.

தமிழ் நிலத்தின் தண்ணீர்த் தேவையை அறிந்து, தமிழ் மாநிலத்தை ஆண்ட பல மன்னர்களும் அணைகள், ஏரிகள் போன்ற பல முன்னேற்பாடுகளைச் செய்து நீர் நிர் வாகத்துக்கு நல்வழிகாட்டி இருக்கிறார்கள்.

தமிழ்நாடும் தமிழர்களும் தண்ணீரின் முக்கியத்தை மறக்கக்கூடாது என்பதற் காகவே ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே’ என்ற ஒரு பழமொழிகூட அந்த மாநிலத்தில் புழங்குவதுண்டு.

இருந்தாலும் தண்ணீருக்காக கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய தன்னைச் சுற்றி உள்ள மாநிலங்களைக் கெஞ்சி நிற்கவேண்டிய நிலைதான் நெடுங்காலமாகவே தமிழகத் துக்கு இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை போதிய அளவுக்கு இல்லாமல் ஏமாற்றிவிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த தண்ணீர் பஞ்சம் இப்போது பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலை விரித்தாட தொடங்கி இருக்கிறது.

கர்நாடகாவில் போதிய மழை இல்லை ஆதலால் காவிரியில் தண்ணீர் வராமல் விவ சாயிகள் திண்டாடுவது ஒரு பக்கம்; பல ஏரி களும் வற்றிவிட்டதால் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல நகர்களில் தண்ணீருக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு மக்கள் வன்செயலில் ஈடுபடும் நிலை தலைதூக்கும் சூழல் மறுபக்கம் என்று இதுவரை இல்லாத வறட்சியை மாநிலம் இப்போது சந்திக்கிறது.

இதற்கெல்லாம் கடந்த அரை நூற்றாண்டு களாக அந்த மாநிலத்தை ஆண்டவர்கள் நீர் நிலைகளை வளப்படுத்தாததும் அணைக் கட்டுகளை, ஏரிகளை நீர்த்தேக்கங்களைப் பாதுகாக்கத் தவறியதும் மழைநீர் நிலத்தி லேயே தேங்குவதற்கு வழி செய்யாததுமே முக்கிய காரணங்களாகத் தெரிகின்றன.

மேலும், ஏரி, குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் குடியிருப்பு நோக்கங்களுக்காக அனுமதிக்கப்பட்டதால் மழைநீர் கடலுக்குச் சென்று விரயமாவதைத்தான் அந்த மாநிலம் இவ்வளவு காலமாகக் கண்டுவந்துள்ளது.

இந்நிலையில், இப்போது மழையும் பொய்த்துவிட்டது. அடுத்த ஆண்டு இன்னும் வறட்சி கூடும் என்று நிதிஆயோக் அமைப்பு பயமுறுத்தி இருக்கிறது. இவை எல்லாம் தமிழ்நாட்டிற்கு இயற்கையும் பருவநிலையும் விடுக்கும் கடைசி எச்சரிக்கையாகவே தெரி கிறது.

அரசியல் தலைவர்களும் மக்களும் இனியும் மெத்தனமாக இருந்துவிடாமல் தண்ணீர் வளத்தைக் கட்டிக்காத்து மேலும் ஆதாரங்களைக் காணவேண்டிய அவசியம் அவசரம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

ஆறு, ஏரி, குளம், நீர்த்தேக்கங்கள் போன்ற வற்றை மீட்டு, அதிகப்படுத்தி, அணைகளைக் கட்டி, நதி இணைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மழை நீர் கடலில் சேர்ந்து விரயமாவதைத் தடுத்து அதை பூமிக்கு அடியில் சேமிப்பதற்கு வழி செய்து, கடல் நீரைப் குடிநீராக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து செயல்பட்டால்தான் தமிழ்நாடு வறட்சிப் பிடியில் இருந்து தப்பிக்கும்.

இதில் அரசியல்வாதிகள் முதல் விவ சாயிகள், பாமரமக்கள் வரை அனைவருக்கும் பங்கும் பொறுப்பும் உள்ளது என்பதை ஒவ் வொருவரும் உணரவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!