செல்வமணி: மானத்தை வாங்கும் நடிகர்கள்

தமிழ்த் திரையுலகில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை புரிந்தவர் பாபு கணேஷ். அவர் தன்மகன் ரி‌ஷிகாந்த்தை நாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் 'காட்டுப்புறா'. இப்படத்தின் பாடல் வெளி யீட்டு விழா சென்னையில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு திரைப் படத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு குறுந் தகடை வெளியிட்டார்.

விழாவில் இயக்குநர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது ஆவேசமாக சில கருத்துக்களைச் சொன்னார். "பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். திரைப்படக் கல்லூரியில் படித்தவர். நான் பல ஆண்டு களுக்கு முன் 'செம்பருத்தி' படத்தை எடுத்தபோது பாபு 'கடல் புறா' எடுத்தார். இப்போது 'காட்டுப்புறா' எடுத்திருக்கிறார். "ஒருநாள் பாபு கணேஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என் மகனை நட்சத்திர கிரிக்கெட் அணியில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் என்று வருத்தப்பட்டார். எனக்கும் வருத்தமாக இருந்தது. அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது என்பதால் நான் ஒன்றும் செய்ய முடியாது என்றேன்.

"என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் பேசும்போது, தமிழ் நடிகர்கள் அணி அண்மையில் ஒரு போட்டி யில் தோல்வியடைந்ததைக் குறிப் பிட்டு கேலி செய்தாள். நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் நம்முடைய நடிகர்கள் சரியாக ஆடாததைத் தான் சொல்லிக் காட்டினாள். "யார், யாரோ இதில் பங்கேற் கிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்களோ தமிழர்கள்தான் ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!