இயக்குநர் ஆனார் கதாநாயகன் தனுஷ்

தமிழ்ப் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் இயக்கு நர் ஆகிறார். முதன்முதலாக அவர் ஒரு படத்தை இயக்குகிறார். இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் தனுஷ். இவருடைய அண்ணன் இயக்குநர் செல்வராகவன். கஸ்தூரிராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத் தின் மூலம் கடந்த 2002ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் தனுஷ். 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'படிக்காதவன்', 'யாரடி நீ மோகினி', 'மாரி', 'மாப்பிள்ளை', 'ஆடுகளம்', 'வேலையில்லா பட்டதாரி' உள்பட இதுவரை 29 படங்களில் அவர் கதா நாயகனாக நடித்து இருக்கிறார். தற்போது, 'தொடரி' என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். 'கொடி', 'வட சென்னை' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

"இயக்குநர் ஆக வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு," என்று தனுஷ் தனது பேட்டிகளில் அடிக்கடி கூறி வந் தார். அந்தக் கனவு அவருக்கு நனவாகி இருக்கிறது. அவர் முதன்முதலாக ஒரு படத்தை இயக்குகிறார். அப்படத்துக்கு 'பவர் பாண்டி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் ராஜ் கிரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகி முடிவாகவில்லை. இதில் தனுஷ் நடிக்கவில்லை. இயக்குநராக மட்டுமே பணிபுரிகிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங் கியுள்ளது. தனு‌ஷுக்கு பிடித்த ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இதி லும் உள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கஸ்தூரிராஜா முதன்முதலாக இயக்கிய 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரண் நாயகனாக அறிமுகமானார். அப்படம் 1991ல் வெளிவந்தது. 25 ஆண்டுகள் கழித்து கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் முதன் முதலாக இயக்கும் படத்திலும் ராஜ் கிரண் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் தனுஷ், தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக்கொண்டே படங்களை இயக்கவும் முடிவு செய்து இருக்கிறாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!