சவாலான பணியில் ஈடுபட்டுள்ள படத்தொகுப்பாளர் ஆண்டனி

'கவண்' படத்தின் இறுதிக் காட்சிக்காக சுமார் 20 மணி நேர படக் காட்சிகளை படத் தொகுப்பாளர் ஆண்டனியிடம் அளித்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கவண்'. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளன. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத் துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா இசையமைத்துள்ளார். ஜனவரியில் இப்படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

படத் தொகுப்பு பணியை ஆண்டனி கவனித்து வருகிறார். குறிப்பாக இறுதிக் காட்சிக்காக மட்டும் சுமார் 20 மணி நேரம் படமாக்கப்பட்ட காட்சிகளைக் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் கே.வி.ஆனந்த். "இவ்வளவு மணி நேர காட்சிகளை வைத்து பணியாற்றுவது சாதாரணமல்ல. எந்தக் காட்சியை வெட்டுவது, எதை பயன்படுத்துவது என யோசித்துச் செயல்பட வேண்டும். சவாலான பணிதான். ஆனா லும் சாதிப்பேன்," என தனது சமூக வலைத்தளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத் தொகுப்பாளர் ஆண்டனி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!