ஸ்வேதா கய்: நான் ஒரு தமிழ்ப்பெண்

தாம் வடஇந்தியப் பெண் அல்ல என்றும் தமிழ்ப் பெண்தான் என்றும் நடிகை ஸ்வேதா கய் தெரிவித்துள்ளார். ஸ்வேதா கய் என்ற தன் பெயரைப் பார்த்து, வடஇந்தியப் பெண் என்று பலர் நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமது பெயருக்குப் பின்னால், அம்மா காயத்திரியின் முதல் இரண்டு எழுத்துகளைச் சேர்த்து ஸ்வேதா கய் என்று வைத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். பெரிய போராட்டத்தைச் சந்தித்த பிறகுதான் தம்மால் கதாநாயகியாக உயர முடிந்தது, 'தப்புதண்டா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்கிறார் ஸ்வேதா.

"இந்தப் படத்தின் நாயகி தேர்வுக்கு 60 பெண்கள் வந்து இருந்தனர். பல கோணங்களில் நடித்துக் காட்டச் சொன்னார்கள். நீண்ட வசனத்தைக் கொடுத்துப் பேசச் சொன்னார்கள். "இதில் எல்லாம் தேறிய பிறகு, நான் ஒல்லியாக இருப்பதாக சொன்னார்கள். இதனால் வாய்ப்பு கிடைக்காதோ எனப் பயந்து கொண்டே இருந்தேன். நல்லவேளையாக வாய்ப்பு கிடைத்தது. இதில் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறேன். நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்," என்கிறார் ஸ்வேதா கய்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!