மருத்துவச் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார் நீதிபதி கர்ணன்

கோல்கத்தா: நல்ல மனநிலையில் இருக்கும் நான் ஏன் மருத்துவச் சோதனைக்குச் செல்ல வேண்டும் என்று அர- சாங்க மருத்துவமனையைச் சேர்ந்த நான்கு பேர்களடங்கிய மருத்துவக் குழுவைத் திருப்பி அனுப்பி விட்டார் கோல்- கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். அந்த மருத்துவர்- களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "நான் நல்ல மனநிலையில் இருக்கின்றேன். அதனால்தான் மருத்துவச் சோதனை செய்துகொள்ள மறுக்கிறேன். மேலும் உச்ச நீதி மன்றத்தின் செயல்பாடுகள் ஒரு நீதிபதியான என்னை அவ மதிப்பதாகவும் துன்புறுத்துவதாகவும் உள்ளன," என்று கூறியுள்ளார். மேலும் அவரது கடிதத்தில், "இதுபோன்ற சோதனைகளுக்கு ஒரு காப்பாளர் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட இங்கு எனக்கு யாருமில்லை. எனவே எந்த ஒரு மருத்துவச் சோதனையும் இப்போது மேற்கொள்ளமுடியாது," என்று கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!