‘கருப்பன்’

விஜய் சேதுபதி, தன்யா இணை சேர்ந்துள்ள படம் ‘கருப்பன்’. திகிலும் அடிதடியும் கலந்த படமாக உருவாகி வரும் இதில், பாபி சிம்ஹாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத் தில் இப்படம் உருவாகிறது. கிஷோர், பசுபதி, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி உள்ளிட்டோரும் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட இருந்தார். எனினும் கால்‌ஷீட் பிரச்சினை காரணமாக தம்மால் நடிக்க இயலாது என்று அவர் கைவிரிக்கவே, அடுத்த முயற்சியாக லட்சுமி மேனனை அணுகினர் இப்படக் குழுவினர். ஆனால் அப்போதும் பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை. தனக்கு அடிபட்டதாகவும் அதனால் படத்தில் இருந்து விலகுவதாகவும் லட்சுமி கூறவே, இறுதியாக தன்யா ஒப்பந்தமானார். கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய கருப்பன் படப்பிடிப்பு தேனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.