அனைத்துலக களத்தில் அடியெடுத்து வைத்த சிங்கப்பூர் கபடிக் குழு

மலேசியாவின் ஜோகூர் மாநிலத் தில் நடைபெற்ற கபடிப் போட்டி ஒன்றில், சிங்கப்பூரைப் பிரதி நிதித்து இரண்டு கபடிக் குழுக்கள் முதல்முறையாகக் கலந்துகொண்டன. அனைத்துலகப் போட்டியில் கலந்துகொண்ட அந்தக் குழுக் களில் ‘சிங்கப்பூர் கபடி’ என்ற குழு, முதல் முயற்சியிலேயே வெண்கலப் பதக்கத்தை வென் றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமையன்று நடந்த இப்போட்டியை ‘விஸ்லாஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற லாப நோக்கமற்ற நிறுவனமும் ‘பெர்சாத்துவான் கபடி ஜோகூர்’ என்ற ஜோகூர் கபடி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்தன.

இரு நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டாளர்களைத் திரட்டி, நட்புமுறை போட்டிகளின் மூலம் கபடி ஆட்டத்தில் அவர் களை வளர்க்கும் நோக்கத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. எட்டு மலேசிய குழுக்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டன. ‘விஸ்லாஸ் கபடி’ என்ற குழு, இரு வெற்றிகளோடும் இரு தோல்விகளோடும், முதல் கட்ட குழு பிரிவில் மூன்றாவதாக வந்தது.

‘சிங்கப்பூர் கபடி’ என்ற குழு, அரையிறுதி ஆட்டம்வரை சென் றது. மிகக் குறுகிய புள்ளிகள் வித்தியாசத்தில் 23-24 என்ற கணக்கில் வீழ்த்தப்பட்டது. இருப்பினும் வெண்கலப் பதக்கத் தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை இக்குழுவினர் படைத்தனர்.