கிறிஸ்மஸ் நன்கொடைகளைத் திரட்டும் சிறுவர் படையினர்

எஸ்.வெங்கடேஷ்வரன்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன் னிட்டு வசதி குறைந்தோருக்கு நன்கொடை திரட்டும் சிறுவர் படையின் ‘ஷேர் எ கிஃப்ட்’ திட்டம் இவ்வாண்டு 31ஆம் முறையாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தேசிய சமூக சேவை மன்றம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைப்புகளின் ஆதரவில் இந்த தேசிய சமூக சேவைத் திட்டம் நடந்தேறியது. சிறுவர் படை வழிநடத்தும் இம்முயற்சியை, தமது முதலாவது நன்கொடையை வழங்கி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ சென்ற மாதம் 21ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தால் கிட்டத்தட்ட 41,000 பேர் பயனடைவார்கள் என்றும் தேவையான நன்கொடைக் கான இலக்கை முழுமையாக இத்திட்டம் அடைந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. ‘ஜூரோங் பாய்ண்ட்’ கடைத் தொகுதியில் 12 நன்கொடை அளிக்கும் இடங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அரிசி, சமையல் எண்ணெய், கலன்களில் அடைக் கப்பட்ட உணவு என்று பல்வேறு அத்தியாவசியத் தேவைகளை பொதுமக்கள் இந்த முயற்சிக்கு வழங்கினார்கள்.

சிறுவர் படை உறுப்பினர் சுஜின் ஜெர்சன் (நடுவில்) பொதுமக்களிடமிருந்து நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டார். படம்: சிங்கப்பூர் சிறுவர் படை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்