25 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: தவிக்கும் திண்டுக்கல்

திண்டுக்கல்: கடந்த 25 ஆண்டுக ளில் காணப்படாத வறட்சி காரண மாக திண்டுக்கல் மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண் டுள்ளனர். அங்குள்ள பெரும்பாலான குளங்கள், அணைகள் தண்ணீ ரின்றி வறண்டு கிடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக இம்மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதே இத்தகைய வறட்சி நிலைக்கு காரணம் என்றும் இந்தாண்டும் மழை அளவு குறைந்தால் விவசாயத் தொழில் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நிபுணர் கள் தெரிவிக்கின்றனர். "திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,093 குளங்கள் உள்ளன. இவற்றுள் தற்போது பத்து குளங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. மற்ற குளங்கள் வறண்டுள்ளன. இது 25 ஆண்டு களில் இல்லாத நிலை.

"திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரி மழையளவு 836 மில்லி மீட்டர். ஆனால் கடந்த 3 ஆண்டு களாக மழை சரியாகப் பெய்ய வில்லை. மழை அதிகளவு பெய்யும் கொடைக்கானல், நத்தம் பகுதிகளி லும் கூட கடந்த 3 ஆண்டுகளில் மழையின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது," என்று கவலை தெரிவிக்கின்றனர் இம்மாவட்ட சமூக ஆர்வலர்கள். இதனால் சாகுபடி செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமலும் விவசாயிகள் தவிப்பதாகவும் அணைகளிலும் நீர்வரத்து அறவே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள குளங்களில் 2,065 குளங்கள் மழையை நம்பியே உள்ளன. 28 குளங்கள் மட்டுமே ஆற்று நீரை நம்பியுள்ளன. இதில் 10 குளங்களில் மட்டுமே ஓரளவு நீர் உள்ளது. எஞ்சிய குளங்கள் வறண்டுள்ளன. "கடந்த 25 ஆண்டுகளில் இதுமாதிரி நிலை ஏற்பட்டதில்லை. குறைந்தது 200 குளங்களிலாவது எப்போதும் தண்ணீர் இருக்கும். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மழை இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. "இம்மாவட்டத்தில் 7 அணை கள் உள்ளன. இவற்றின் நீர் மட்ட மும் வேகமாகக் குறைந்து வருவ தால் கவலையில் உள்ளோம்," என்கிறார்கள் விவசாயிகள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!