காலணிக்குள் புகுந்த பாம்பு பள்ளி மாணவனை தீண்டியது

சேலம்: காலணிக்குள் பாம்பு புகுந் ததை அறியாமல் அதை அணிந்து சென்ற பள்ளி மாணவனை அது கடித்தது. இதையடுத்து அம்மாணவன் மருத்துவமனையில் அனும திக்கப் பட்டுள்ளான். சேலத்தைச் சேர்ந்தவர் முரளித ரன். இவரது 13 வயது மகன் சத்தியாஸ், உள்ளூர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற சிறுவன், வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனிக்க முற்பட்டபோது, காலணிக்குள் இருந்த பாம்பு அவனை தொந்தரவு செய்யத் துவங்கியுள்ளது. இதனால் அசௌகரியமாக உணர்ந்த சத்தியாஸ், ஏதும் கூறி னால், ஆசிரியர் ஏசுவாரோ என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்துள்ளான். எனினும் சிறுவன் படபடப்பாக இருந்ததைக் கண்டு சந்தே கமடைந்த ஆசிரியர், என்ன விஷயம்? என விசாரித்துள்ளார்.

இதையடுத்து தனது காலில் ஏதோ உறுத்துவது போல இருப்ப தாக கூறினான் சத்தியாஸ். அதற் குள் அந்தப் பாம்பு அவனைத் தீண்டியதாகத் தெரிகிறது. இதனால் சிறுவன் அலறித் துடிக்க, சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவரின் காலணியைக் கழற்ற, அதிலிருந்த சிறிய கட்டுவிரியன் பாம்பு வெளியே ஓடியது. இதைக் கண்ட ஆசிரியரும், சக மாணவர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பள்ளி நிர்வா கத்தினர் அப் பாம்பை அடித்து கொன்றதுடன், சத்தியாசை சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைதராபாத்தில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்

12 Nov 2019

ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்