கெஜ்ரிவால்: நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு

புதுடெல்லி: நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது என்ற அச்சம் சில நீதிபதிகளிடையே நிலவுகிறது என்று டெல்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க மாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் இதனை உடனடியாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், டெல்லி உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி உட்பட பல பிரமுகர்களும் அரசியல் தலை வர்களும் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் பேசினார். "தங்களுடைய தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுக்கேட்கப்படுவதாக நீதி பதிகள் சிலர் கவலையில் உள்ளனர் என் பதை நான் அறி வேன். நீதிபதிகளின் தொலை பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்க செயலாகும்," என்று கெஜ்ரிவால் முழங்கினார். மேலும் பேசிய அவர், "நீதி பதிகள் தொலைபேசி அழைப்பு ஒட்டுக்கேட்கப்படுவது ஜனநாயகத் தின் மீதான தாக்குதல். நீதித் துறையின் சுதந்திரத்தில் அத்து மீறும் செயலாகும். "உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு உச்ச நீதி மன்றத்தின் கொலீஜியம் வழங்கிய பரிந்துரைகளை 9 மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது. கொலீஜியத்துடன் மோதல் போக்கைக் கடைபிடிப்பது உகந் தது அல்ல.

"அனைத்து அதிகாரங்களும் ஒருவரிடமே தேங்கிவிட்டால் நாடு சர்வாதிகாரத்தில் சிக்கக்கூடும். நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துவது அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையேயான இடை வெளியை மேலும் அதிகரிக்கும்" என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டார். இதற்கிடையே இதே நிகழ்ச் சியில் தொடர்ந்து பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் கெஜ்ரிவால் முன் வைக்கும் குற்றச்சாட்டைத் திட்ட வட்டமாக மறுக்கிறேன்," என்றார். "நீதிபதிகள் நியமனத்தில் சுமூகமான முடிவு எட்டப்படு வதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வரு கின்றன" என்றும் திரு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!