பாஜகவுக்கு எதிராக 150 தொகுதிகளில் சிவசேனா!

லக்னோ: அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவை எதிர்த்து சிவசேனா போட்டியிடுகிறது. உ.பி.யில் மட்டும் அதிகபட்ச மாக 150 தொகுதிகளில் அக் கட்சி போட்டியிட உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் ஆட்சியைப் பகிர்ந்துகொண்டுள்ள சிவசேனா, மத்திய அமைச்ச ரவையிலும் இடம்பெற்றுள்ளது. என்றாலும் மகராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலத் தேர்தல்களில் சிவசேனா தனித்தே போட்டியிட் டது. இந்த வகையில் அந்தக் கட்சி கடைசியாக பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் 150 தொகு திகளில் போட்டியிட்டது.

இங்கு அனைத்துத் தொகுதிக ளிலும் தோல்வி அடைந்ததுடன் தனது வேட்பாளர்களின் வைப்புத் தொகையையும் இழந்தது. என்றா லும் தற்போது அறிவிக்கப்பட் டுள்ள 5 மாநில தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியைச் சேர்ந் தவரும் மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சருமான ஆனந்த் கீதே கூறும்போது, "5 மாநிலத் தேர்தல்களில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டு சேர முடிந்தால் அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். "யாருடனும் சேர முடியாவிட் டால் தனித்தே போட்டியிடுவோம்," என்றார்.

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 150ல் சிவ சேனா போட்டியிட முடிவு செய் துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இங்கு பாஜக முக்கிய போட்டி யாளராக விளங்கும் நிலையில், அதன் சில நூறு வாக்குகளையே சிவசேனா பிரிக்கும் வாய்ப்புள் ளது. இதையே தான் பீகாரிலும் அக்கட்சி செய்தது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகியவற்றிலும் சிவசேனாவுக்கு பெரிய அளவில் வாக்குகள் இல்லை. கோவா தவிர மற்ற நான்கு மாநிலங்களில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவும் இதுவரை எந்தக் கட்சியும் முன்வரவில்லை. கோவாவில், பாஜகவின் தாய் கழகமான ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து பிரிந்த சுபாஷ் விளிங்கர் என்பவர் 'சுரக் ஷா மன்ச்' என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியுள் ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!