73 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. 15 மாவட்டங்களிலுள்ள 73 தொகுதி களுக்கான பிரசாரம் நேற்று மாலை யுடன் ஓய்ந்தது. கடந்த இரு வாரங் களாகத் தீவிரமாக மேற்கொள் ளப்பட்ட பிரசாரத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்கள். முதற்கட்ட வாக்குப்பதிவு நடை பெறும் 73 தொகுதிகளில் கடந்த ஆண்டு வன்முறையால் பாதிக் கப்பட்ட முகாபர்பூர் ஷாம்லி தொகுதியும் அடங்கும். இத்தொகுதியில் யாருக்கு வெற்றி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு தேர்தலின்போது இந்த 73 தொகு திகளில் பாஜக 11 இடங்களில் தான் வெற்றி பெற்றது.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபடும் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!