ஏப்ரல் 14 வரை நாடெங்கும் ஊரடங்கு

புதுடெல்லி: உலகெங்கும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா கிருமித் தொற்று இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க, மூன்று வாரங்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

“இந்த உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிக்க உள்ளது. மக்கள் கட்டுப்பாட்டுடன் இந்தப் பிரச்சினையை அணுகாவிடில்  பேராபத்தை சந்திக்க நேரிடும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

நேற்று காலை நிலவரப்படி,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 562ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் களில் 40 பேர் குணமடைந்துள்ளனர். 

உலகத்தையே பீதியில் உலுக்கி வரும் இந்தக் கிருமித்தொற்றால் தமிழகத்தில் ஒருவர் பலியானதையும் சேர்த்து இந்தியாவில் 11 பேரும்  உலகத்தில் நேற்று இரவு நேரத்துடன்  19,620 பேரும் உயிரிழந்தனர்.  

இந்தியாவில் 562 பேர் இந்த நோய்க் கிருமியால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், ‘நாடெங்கும் ஊரடங்கு’ எனும் கடும் நடவடிக்கை யைப் பிறப்பிக்காவிடில்  இந்தியா வின் 1.3 பில்லியன் மக்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று  பிரதமர் மோடியும் சுகாதார நிபுணர்களும் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய  அமைச்சர்கள் அனைவரும் அருகருகே அமராமல் இடைவெளி விட்டு நாற்காலிகளைப் போட்டு அமர்ந்திருந்தனர். 

இவ்வாறு அமைச்சர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் அமைந்திருந்ததாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பேசுகை யில், “கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த ‘தனித்து இருப்பது’ மட்டுமே ஒரே தீர்வு என்று நிபு ணர்கள் கூறுகிறார்கள். 

“தனித்து இருத்தல் என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும்தான். ஏன் பிரதம ரான  எனக்கும் இது பொருந்தும். தனித்து இருப்பதை நாம் அலட்சியப் படுத்தினால், அதற்கு இந்தியா கடு மையான விலையைக் கொடுக்க வேண்டியது வரும். இந்த ஊரடங் கால் நிதி இழப்பைச் சந்திக்கலாம்.   ஆனால், மக்களின் பாதுகாப்புக்கு இது முக்கியம்,” என்று தெரிவித்தார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!