25 பள்ளிகளில் ஒரே நேரத்தில் வேலை, சம்பளம்; விசாரணை

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஒரே நேரத்­தில் ஓர் ஆசி­ரியை 25 அர­சாங்கப் பள்­ளிக்­கூ­டங்­களில் வேலை பார்த்­த­தா­க­வும் கடந்த 13 மாதங்­களில் அவர் ரூ. 1 கோடி ஊதி­யம் பெற்­ற­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இதை அறிந்து அதிர்ச்­சி அடைந்துள்ள அதிகாரிகள் உட­னடி­யாக இது பற்றி விசா­ரிக்­கும்­படி உத்­த­ரவு பிறப்­பித்துள்ளனர்.

மெயின்­புரி என்ற நக­ரைச் சேர்ந்த அனா­மிகா சுக்லா என்ற அறி­வி­யல் ஆசி­ரியை பல மாவட்­டங்­களில் உள்ள 25 பள்­ளிக்­கூடங்­களில் பணி­பு­ரி­வ­தா­கப் பதி­வேடு தெரி­விக்­கிறது. 13 மாதங்­க­ளாக இவ­ருக்கு ரூ. 1 கோடி ஊதி­யம் கிடைத்­துள்­ளது.

இணை­யத்­தில் ஆசி­ரி­யர்­கள் ஊதி­யம் பெறு­வ­தால் சந்­தே­கம் எழா­ம­லேயே இருந்து வந்­தது.

இந்த நிலை­யில், மாநி­லத்­தில் அனைத்து ஆசி­ரி­யர்­க­ளின் தக­வல்­களும் கணி­னி­யில் பதி­யப்­பட்­ட­போது இந்த விவ­கா­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறு­கி­றார்­கள்.

இது எப்­படி நிகழ்ந்­தது என்­பது தங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை என்று மாநில பள்­ளிக் கல்வி இயக்­கு­நர் விஜய் கிரண் ஆனந்த் தெரி­வித்­தார்.

இந்த விவ­கா­ரத்­தில் அதி­காரி கள் யாரே­னும் உடந்­தை­யாக இருப்­பது தெரி­ய­வந்­தால் அவர்­கள் மீதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.