தலா ஒரு கிலோ எடைகொண்ட 218 பொட்டலங்களுடன் 20 மீனவர்கள் கைது ரூ.1,526 கோடி ஹெராயின் பறிமுதல்

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லம், கொச்சி கடல்­ப­கு­தி­யில் 218 கிலோ எடை கொண்ட ஹெரா­யினை வரு­வாய் புல­னாய்வுத் துறை அதி­கா­ரி­களும் இந்­தியக் கட­லோ­ரக் காவல்­படையின­ரும் பறி­மு­தல் செய்­த­னர்.

அனைத்­து­லக கள்­ளச்­சந்­தை­யில் இந்­தப் போதைப்­பொ­ரு­ளின் மதிப்பு 1,526 கோடி ரூபாய் என நிதி அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

கொச்சி கடல் பகு­தி­யில் போதைப்­பொ­ருள் கடத்­தல் நடை­பெ­று­வ­தாக ரக­சிய தக­வல் கிடைத்­ததை அடுத்து, வரு­வாய் புல­னாய்­வுத் துறை, இந்­தியக் கட­லோ­ரக் காவல்­ப­டை­யி­னர் இணைந்து கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்ேபாது ஆப்­கா­னிஸ்­தான் நாட்­டி­லி­ருந்து வந்த கப்­ப­லில் இருந்து சில மூட்­டை­கள் தமி­ழக மீன­வர்­க­ளின் இரு விசைப் பட­கு­களில் ஏற்­றப்­பட்­டன.

அதன்­பி­றகு, அர­பிக்­க­டல் பகு­திக்­குள் புகுந்து கேரளா நோக்கி பட­கு­கள் விரைந்­தன.

இதைக் கண்ட அதி­கா­ரி­கள், பிரின்ஸ், லிட்­டில் ஜீசஸ் என்ற இரு பட­கு­க­ளை­யும் துரத்­திச் சென்று சோதனை போட்டனர்.

பட­கு­களில் மீன்­க­ளைப் பதப்­படுத்தி வைக்­கும் அறை­யில் சாக்கு மூட்­டை­களில் தலா ஒரு கிலோ எடை­யு­டன் 218 பொட்­ட­லங்­களில் போதைப்பொருள் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

இரு பட­கு­க­ளி­லும் இருந்த கேர­ளா­வைச் சேர்ந்த 4 மீன­வர்­கள், கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், குளச்­சல், தூத்­தூர் பகு­தி­யைச் சேர்ந்த 16 மீன­வர்­கள் என ஒட்­டு­மொத்­த­மாக 20 மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்டனர்.

'ஆப்ரே­ஷன் கோஜ்­பீன்' என்ற கூட்டு நடவடிக்கையின் கீழ், கொச்சி துறை­மு­கத்­துக்கு அழைத் துச் சென்று அவர்களிடம் நடத்­திய விசாரணையில், ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து பாகிஸ்­தான் வழி­யாக இந்த ஹெரா­யினை கடத்தி வந்து கள்­ளச் சந்­தை­யில் விற்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­ததாகக் கூறினர்.

இந்த போதைப் பொருள் எங்கு கொண்டு செல்­லப்­பட இருந்தது? பின்­ன­ணி­யில் இருக்­கும் அனைத் துலக போதைப்பொருள் கடத்­தல் கும்­பல் யார் என்­பன குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை.

மீன்பிடித் தொழி­லின் போர்­வை­யில் மீன­வர்­கள் வெளிநாட்­டில் இருந்து இவ்வளவு அதிக அள­வில் ஹெரா­யினை கடத்தி வந்­துள்ள சம்­ப­வம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்­படுத்தி­உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!