புத்துணர்வூட்டும் பாசி உருண்டைகள்

செடி அலங்­கா­ரத்­தில் ஆர்­வ­முள்­ள­வர்­கள் தங்­க­ளின் வீட்­டி­லும் அலு­வ­ல­கத்­தி­லும் செடி­க­ளை­யும் பூக்­க­ளை­யும் வளர்ப்­பது வழக்­கம். அவற்றை அழ­கான ஜாடி­களில் வைப்­ப­தும் உண்டு.

கிட்­டத்­தட்ட 500 ஆண்­டு­க­ளுக்கு மேல் உரு­வான ஒரு கலை­யா­கக் கூறப்­படும் ‘கொக்­கி­டாமா’ (Kokedama) என்ற ஜப்­பா­னிய செடி அலங்­கா­ரக் கலைக்கு ஜாடி­க­ளுக்­குப் பதி­லாக பாசி உருண்­டை­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

செடி அலங்­கா­ரத்­து­டன் நீடித்த நிலைத்­தன்மை ஆர்­வ­லர்­க­ளாக இருப்­போ­ருக்கு மத்­தி­யில் ‘கொக்­கி­டாமா’ புகழ்­பெற்ற ஒரு கலை­யாக உள்­ளது.

ஆரோக்­கி­யத்­தை­யும் அமை­தி­யை­யும் ஏற்­ப­டுத்­தும் ஓர் இயற்­கைச் சூழ­லைப் பழங்­கால ஜப்­பா­னிய மக்­கள் உரு­வாக்க முயன்­ற­தன் விளை­வாக இந்­தக் கலை பிறந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

காற்­றைச் சுத்­தப்­ப­டுத்­தும் தன்மை கொண்ட கொக்­கி­டாமா, மன உளைச்­ச­லை­யும் குறைக்க உத­வு­வ­தா­கக் கூறப்­படு­கிறது. நம்­மைச் சுற்­றி­யி­ருக்­கும் எதிர்­மறை உணர்­வு­களை நீக்­கும் ஆற்­றல் கொக்­கி­டா­மா­வுக்கு உள்­ளது என்­பர். புது­மை­யான அலங்­கா­ர­மா­கக் காட்­சி­ய­ளிக்­கும் கொக்­கி­டாமா, சில சம­யம் தொங்­க­வி­டப்­ப­டு­வ­தும் உண்டு.

வெளிப்­பு­றங்­க­ளி­லும் வைப்­ப­தற்கு ஏற்ற இச்­செ­டி­க­ளைப் பரா­ம­ரிப்­பது மிக எளி­தாக உள்­ளது என்­று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!