பிடோக் சாலையில் கார்கள் மோதல், இரு பாதசாரிகள் உயிர் தப்பினர்

பிடோக் நார்த் அவென்யூ மூன்று, நியூ அப்பர் சாங்கி சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் இரு பாதசாரிகள் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்தில் பெண் ஒருவரும் பள்ளி மாணவன் ஒருவனும் மழைக்குக் குடை பிடித்தவண்ணம் சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது வலது புறமாக வளைந்த ஒரு வாகனம் மீது நேரே வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் மோதியது. அந்த மோதலின் தாக்கத்தால் வாகனம் இரு பாதசாரிகளையும் நோக்கி வந்ததில் இருவரும் சற்று நகர்ந்து காயங்களின்றி உயிர்தப்பினர். சம்பவத்தால் இருவரும் அதிர்ச்சி அடைந்ததாக அறியப்படுகிறது. சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.