சினிமா ரசிகர்களின் காதல் தேவதையாக, கனவுக்கன்னியாக இருக்கவேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் இளம் நாயகி பிரியா வாரியார்.
இவரது நடிப்பில் உருவான 'ஒரு அடார் லவ்' மலையாளப் படம் தற்போது தமிழில் வெளியாக உள்ளது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் பிரியா.
சினிமாவில் காதல் தேவதையாக, மென்மையான இளம்பெண்ணாக வலம் வருபவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் துணிச்சலான பெண். எத்தகைய சூழ் நிலையிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தெரியும் என்கிறார்.
ஒன்பதாம் வகுப்பு படித்தபோது சக மாணவர் ஒருவர் இவரைக் காதலிப்பதாகக் கூறினாராம். பிரியாவும் அந்த மாணவரைக் காதலித்துள்ளார். பிறகு அது உண்மையான காதல் உணர்வல்ல என்றும் வெறும் கவர்ச்சி, ஈர்ப்பு என்றும் புரிந்து போனதாம்.
"இருவருமே இந்த உண்மையை உணர்ந்தோம். அதனால் மனம் விட்டுப் பேசிப் பிரிந்துவிட்டோம். இப்போது நடிப்பிலும் படிப்பிலும் மட்டுமே எனது முழுக்கவனமும் உள்ளது," என்று சொல்லும் பிரியாவுக்கு தமிழில் விஜய்தான் பிடித்தமான நடிகர்.
காதல் தேவதையாக விரும்பும் பிரியா வாரியார்
29 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jan 2019 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!