'மெட்ராஸ்', 'கணிதன்', 'கதகளி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கேத்ரின் தெரசா. இவர் விஷ்ணு ஜோடியாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வந்தார். சுசீந்திரன் எழுதிய இக்கதையை 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கி வந்தார். சென்ற வருடம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு சத்தமில்லாமல் பட வேலைகள் அடங்கிப்போயின. இதற்கிடையில் விஷ்ணு சொந்தமாக தயாரித்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' திரைக்கு வந்தது. அது அவருக்கு லாபகரமான படமாக அமைந்தது. இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' படத்தில் நடிக்கிறார் விஷ்ணு. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து விஷ்ணு மீண்டும் சொந்தப் படம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக கேத்ரின் தெரசா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கெனவே விஷ்ணுவுடன் ஜோடியாக கேத்ரின் நடித்து வந்த 'வீர தீர சூரன்' படம் கைவிடப்பட்டதால், அதற்காக அவரிடம் வாங்கிய கால்ஷீட்டை தனது சொந்தப் படத்துக்கு விஷ்ணு பயன்படுத்திக்கொள்கிறாராம்.
விஷ்ணு ஜோடியாக கேத்ரின் தெரசா
22 Sep 2016 07:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2016 06:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!