வாகனக் கடன் விதிகள் ‘எம்ஏஎஸ்’ தளர்த்தியது

மோட்டார் வாகனக் கடன்களுக்கு நீண்ட காலத்திற்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்துவரும் என்றாலும் அவற்றுக்கு அனுமதிக்கப்படும் மதிப்புக்கு ஏற்ற கடன் விகிதமும் கடன் அடைப்புக் காலமும் தளர்த்தப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) நேற்று அறிவித்தது. வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தில் மிதமான நிலையே நிலைப்பட்டு இருந்து வருகிறது என்பதையும் கடந்த மூன்று ஆண்டுகளில் பணவீக்க நெருக் குதல்களைக் கருத்தில் கொண்டும் இந்தச் சரியாக்கங்கள் இடம்பெறுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை ஆணையம் 2013ல் கொண்டு வந்தது. கார்கள், வாகன உரி மைச் சான்றிதழ் ஆகியவற்றுக் கான தேவையை மிதமாக்கவும் பணவீக்க நெருக்குதல்களைச் சமாளிக்கவும் இது இடம்பெற்றது. நிதி தொடர்பிலான மதிநுட் பத்தை ஊக்குவித்தல், கார்களின் பயன்பாடு குறைந்த சமூகம் ஆகிய நீண்டகால நோக்கங்களுக்காகவும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. அனுமதிக்கப்பட்ட வாகன எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் ஆண்டிற்கு 0.25 விழுக்காடு என்ற அள விலேயே நீடிக்கும். இருப்பினும், வாகன உரிமைச் சான்றிதழ் ஒதுக்கீடு அண்மைய காலாண்டுகளாக விரிவாக்கம் கண்டு வந்தது. அதேபோல, பதிவு நீக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!