கோ: சமூகத்துக்கு உதவ நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும்

சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் நிறுவனங்கள் தங்கள் வளங்களைத் திரட்டி, மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்ற 'புரொஜெக்ட் வீ கேர்' எனும் முதலாவது கருத் தரங்கில் திரு கோ இவ்வாறு பேசினார். 2012ஆம் ஆண்டில் மக்கள் கழகம், நிறுவனங்கள் ஆகியவற் றால் தொடங்கப்பட்ட 'புரொஜெக்ட் வீ கேர்' திட்டம், நிறுவனங்கள் தொண்டூழியத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு கோ, "சமூக சேவை கள் அதன் மூலம் இறுதியில் பய னடைவோருக்குப் பொதுவில் சென்று சேர்வதில்லை. சமூகத்தில் மக்கள் கழகம் போல், மக்களின் தேவைகளறிந்த அமைப்பு இருந்து, உதவி தேவைப்படும் மக்களுக்கு என்னென்ன உதவிகளை நிறுவ னங்கள் செய்ய இயலும் என்று தெரிந்திருந்தால், பின்னர் இந்த இரண்டையும் ஒன்றிணைத்து சிறப்பாகச் செயலாற்றலாம்," என் றார். இத்திட்டத்தின் மூலம் மரின் பரேட் வட்டாரத்தில் வசதி குறைந்த 40 குடும்பங்களுக்கு உதவி சென்று சேர்கிறது. அவர் களது இல்லங்களில் அடிப்படை மறுசீரமைப்புப் பணிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் மக்கள் கழகம் 19 நிறுவனங்களை வெவ்வேறு வழிகளில் உதவ ஒன்றிணைத்து உள்ளது. உதாரணத்துக்கு, பொறி யியல் நிறுவனமான 'ஹோப் டெக் னிக்', வசதி குறைந்தோரின் இல் லங்களுக்கு தனது 80- ஊழியர் களை அனுப்பி, அந்த வீடுகளில் குழாய்கள் பழுதுபார்த்தல், சக்கர நாற்காலியில் பழுதடைந்த சக்கரங் களை மாற்றுதல் போன்ற பணி களை மேற்கொண்டது. மற்றொரு சிவில் பொறியியல் நிறுவனமான கோ கொக் லியோங் எண்டர்பிரைஸ், வீடுகளில் மேற் கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகளுக்கான செலவை ஈடு கட்ட பணத்தை நன்கொடையாக அளித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!