மாலுமியைத் தடுத்து வைத்திருப்பது குறித்து சிங்கப்பூர் மிகுந்த கவலை

சிங்கப்பூர் மாலுமி தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இந்தோனீசி யாவில் தடுப்புக் காவலில் இருப்பது குறித்தும் அதற்குத் தொடர்பான வழக்கு நீண்ட நாள் நீடிப்பது குறித்தும் சிங்கப்பூர் மிகுந்த கவலை கொண்டுள்ளது என வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. திரு ‌ஷூ மேலும் தாமதம் இல்லாமல் சிங்கப்பூர் திரும்புவதற் காக சம்பந்தப்பட்ட இந்தோனீசிய அதிகாரிகளுடனும் வெளியுறவு அமைச்சு தொடர்பு கொண்டுள்ளது எனவும் அறிக்கை குறிப்பிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூர் மாலுமியான 51 வயது திரு ‌ஷூ, இந்தோனீசியாவின் பின்டான் கடல் பகுதியில் தமது படகில் 13 சிங்கப்பூர், மலேசியப் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போது அவரது படகு இந்தோனீசிய கடற்படையால் நிறுத்தப்பட்டது.

அவர் சட்டவிரோதமாக அங்கு சென்றதாகவும் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகவும் திரு ‌ஷூ மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு பின்பு அவை நீக்கப்பட்டன. சட்டவிரோதமாக இந்தோனீ சியாவுக்குள் நுழைந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு 50 மில்லியன் ருப்பியா ($5,300) அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்ட அவர் ஒப்புக்கொண்டபோதும் திரு ‌ஷூ தொடர்ந்து சிறையில் உள்ளார். மேலும் இந்தோனீசிய கடற்படை அவர் மீது அனுமதி இல்லாமல் நுழைந்த குற்றச்சாட்டைச் சுமத்தத் திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு இந்தோனீசியாவின் சட்டத் தையும் அதன் வழிமுறைகளையும் மதிக்கிறது ஆனால் திரு ‌ஷூவின் வழக்கு நீண்ட நாள் நீடிப்பது குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. வெளியுறவு அமைச்சு அதிகாரி களும் பாத்தாமில் உள்ள சிங்கப் பூர் தூதரகமும் திரு ‌ஷூவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உதவி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!