திருடியதை ஒப்புக்கொண்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் மின்னியல், மின்ன ணுவியல் துறையில் முழுநேரமாக பணிபுரியும் பேராசிரியர் ஒருவர், தான் ஒரு பேரங்காடியிலிருந்து பொருட்களைத் திருடியதாக இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். எர் மெங் ஜூ, 55, கடந்த ஆண்டு ஜனவரியில் டன்யர்ன் சாலையில் எஸ்ஸே„ பெட்ரோல் நிலையத்தில் அமைந்துள்ள என்டி யுசி ஃபேர்பிரைஸ் கடையில் வாசனை, குளியலறை தொடர்பான பொருட்கள் உட்பட $225.15 பெறுமானமுள்ள பொருட்களைத் திருடியதாக குற்றத்தை ஒப்புக் கொண்டார். களைத் திருடியதாக ஐந்து வேறு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

கண்காணிப்புக் கேமராவில் பதிவான காணொளியை ஆய்வு செய்த ஃபேர்பிரைஸ் கடை நிர்வாகி ஒருவர், எர் மெங் ஜூ சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தார். அவர் கடைக்கு வரும் வழக்க மான வாடிக்கையாளர் என்று அறிந்த அந்த நிர்வாகி, பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலி சிடம் புகார் அளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!