வேலை இழந்தவர்களுக்கு தொழிற்சங்கங்கள் உதவி

பொருளியலின் சில துறைகள் சிரமங்களை எதிர்நோக்குகின் றன. அந்தத் துறைகளில் வேலை வாய்ப்பு குறைகிறது. இருந்தாலும் இதர துறைகள் வளர்ச்சிகண்டு வருகின்றன. இதன் விளைவாக ஏற்ற, இறக்கமான வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன. நிச்சயமில்லாத இந்தச் சூழ் நிலையில் தொழிற்சங்கத் தலை வர்கள் ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர்களுக்கு உதவி அவர்கள் வேறு துறைகளில் வேலை பெற துணை நிற்கிறார்கள். பிரதமர் லீ சியன் லூங்கும் தொழில்துறைத் தலைவர்களும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தொழில் துறைத் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கடலோர எண் ணெய், எரிவாயு துறையில் ஆட் குறைப்புக்கு ஆளானவர் களுக்கு விமானத் தொழில்துறை யில் வேலைகள் கிடைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டாக அவர்கள் குறிப்பிட்டனர். திரு லீயுடன் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த அந்தக் கலந்துரை யாடலில் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தொழிற்சங்கத் தலைவர்கள் எட்டு பேர் கலந்து கொண்டனர். அவர்களில் திருவாட்டி சில்வியா ஒருவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!