டாக்சி, கார்கள் மோதியதில் நால்வர் காயம்

அங் மோ கியோ அவென்யூ 3ல், நேற்று காலையில் இரு கார்களு டன் டாக்சி ஒன்று மோதியதில் நால்வர் காயமடைந்தனர். மூவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். கட்டுப்பாட்டை இழந்த டிரானஸ்கேப் டாக்சி, சாலையைப் பிரிக்கும் தடுப்பில் மோதி, எதிர்த் திசையில் திரும்பி அங்கு வந்து கொண்டிருந்த இரு கார்களின் மீது மோதியது என்று வான்பாவ் செய்தி குறிப்பிட்டது. ஹவ்காங் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் அங் மோ கியோ அவென்யு 3ல் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 7.36க்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் கூறியது. விபத்தில் கறுப்புநிற காரின் முன்பக்கம் நசுங்கி, ஒரு சக்கரம் கழன்றது. டாக்சியின் முன் பக்கமும் கடுமையாகச் சிதைந்தது. வெள்ளி நிற காருக்கு குறைவான சேதம் ஏற்பட்டுள்ளது.

டாக்சியும் இரு கார்களும் மோதியதில் நால்வர் காயம். படம்: லியன்ஹ வான் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!