சுடச் சுடச் செய்திகள்

$1.2 பி. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, மெடிசேவ் நிரப்புத்தொகை

தகுதியுடைய சிங்கப்பூரர்கள் 1.57 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டு மற்றும் மெடிசேவ் நிரப்புத்தொகையாக மொத்தம் $1.2 பில்லியனை அரசாங்கம் வழங்கவிருக்கிறது. இந்த பற்றுச்சீட்டு, நிரப்புத் தொகை குறித்த விவரம் அடங் கிய கடிதங்களை விரைவில் அவர்கள் பெறுவர் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. கிட்டத்தட்ட 1.37 மி. சிங்கப் பூரர்கள் $500 வரையிலான ஜிஎஸ்டி ரொக்கப் பற்றுச்சீட்டுகளைப் பெறுவர். அதில் $300 வரையிலான தொகை ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும். அதன்பின் இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் ஒருமுறை மட்டும் சிறப்புத் தொகை வழங்கப்படும்.

இந்தப் பணத்தைத் தங்களது வங்கிக் கணக்கு மூலமாக பெற விரும்பும் தகுதியுடைய சிங்கப் பூரர்கள், www.gstvoucher.gov. sg என்ற இணையப் பக்கம் வாயிலாக தங்களது வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அளிக்கலாம். காசோலை மூலமாகப் பணம் பெற மேலும் இரண்டு வாரங்கள் ஆகலாம். 65 மற்றும் அதற்கு மேல் வயதுடைய சுமார் 450,000 சிங்கப்பூரர்கள் மெடிசேவ் நிரப்புத் தொகை பெற தகுதி பெறுகின் றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆகஸ்ட் மாதத்தில் $450 வரை யிலான தொகையைப் பெறுவர். முன்னோடித் தலைமுறையின ருக்கு ஜூலை மாதத்தில் ‘முன் னோடித் தலைமுறையினர் நிரப் புத்தொகை’யாக $200 முதல் $800 வழங்கப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon