‘பிஎம்டி’ தொடர்பான காயங்களுக்காக அவசரநிலைப் பிரிவில் அதிகமானோர் அனுமதி

விபத்துக்குள்ளாகி, பொது மருத்துவமனைகளின் அவசர நிலைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படக் கூடிய அளவில் காயம்பட்ட தனி நபர் நடமாட்டச் சாதன (பிஎம்டி) ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் அவசர நிலைப் பிரிவுகளில் பத்து பேர் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டில் அந்த எண் ணிக்கை 23க்கு உயர்ந்தது. தனி நபர் நடமாட்டச் சாதனங்களின் பின்னிருக்கையில் அமர்ந்திருப் போரில் மூவர் கடந்த ஆண்டில் அவசரநிலைப் பிரிவில் சேர்க்கப் பட்டனர் என்றும் 2017ல் அவ்வாறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இத்தகவல் தேசிய விபத்து தொடர்பான அதிர்ச்சி பதிவகத் தின் குறிப்பிலிருந்து பெறப்பட்டது.

அண்மைய ஆண்டுகளில் இயந்திரச் சாதனங்கள் சிங்கப்பூர் சாலைகளில் தோன்றியதிலிருந்து இந்தப் பதிவகம் 2017ஆம் ஆண்டி லிருந்து ‘பிஎம்டி’ தொடர்பான காயங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கக் தொடங்கியது.

இவற்றில் 36 ‘பிஎம்டி’ சாதன ஓட்டுநர்களும் பின்னிருக்கைப் பய ணிகளும் கடந்த ஆண்டுகளில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 15 பேருக்குப் காயங்கள் பல ஏற்பட் டன.

11 பேருக்குத் தலையில் காயங் களும் மூவருக்கு முதுகுத் தண் டில் காயங்களும் ஏற்பட்டன. நெஞ்சு, கால்கள், இடுப்பு, பாதங் கள் ஆகிய பகுதிகளிலும் காயங் கள் ஏற்பட்டன.

காயம்பட்டவர்களில் பெரும்பா லானவர்கள் சறுக்கியும் சாலை யோர மேடையில் மோதியும் சாலை களைக் கடக்கும்போது மோட்டார் வாகனத்தின் மீது மோதியும் விபத்துக்குள்ளானார்கள்.

“சிலர் தங்கள் ‘பிஎம்டி’ சாத னங்களிலிருந்து தூக்கி வீசப்பட் டும், அதிகமான காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் பெரும் பாலோர் தலைக்கவசத்தையோ பாதுகாப்பு உடைகளையோ அணி வதில்லை,” என்று தேசிய பல்க லைக்கழக மருத்துவ மனையின் அவசரநிலை மருத்துவப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் விக்டர் ஓங் கூறினார்.

“பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையுடன் ஒப்புநோக்க, இப்போது அவசரநிலைப் பிரிவுக்கு வரும் பிஎம்டி சாதனங்கள் தொடர் பான காயங்களுக்காக அதிகமா னோர் வருகின்றனர்,” என்றும் சொன்னார் டாக்டர் ஓங்.

‘பிஎம்டி’ சாதனங்கள் மோதி காயம்பட்ட பாதசாரிகளின் தகவல் கள் இல்லை.

“காயம்பட்டவர்களுக்கு பெரும் பாலும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலேயே காயம் ஏற்படு கிறது. அதன் விளைவாக மண்டை ஓடு முறிவு, மண்டை ஓட்டில் ரத்தக் கசிவு போன்ற சிக்கல்கள் தோன் றுகின்றன,” என்று குறிப்பிட்ட டாக்டர் ஓங், “கால், விலா எலும்பு களில் முறிவுகள், நுரையீரலில் காயம், கைகளிலும் தோலிலும் தசைக் கிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்,” என்றும் விளக் கினார்.

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் ‘பிஎம்டி’ சாதனங் கள் தொடர்பாக வாரத்துக்கு சுமார் மூன்று விபத்துகள், கவனக் குறைவாலும் வேகமாகச் செல்வ தாலும் நிகழ்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!