சின் சுவீ சாலை புளோக்கில் மரணம்: போலிசார் விசாரணை

சின் சுவீ சாலையில் அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

இதுகுறித்து தங்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, புளோக் 52 சின் சுவீ சாலைக்கு போலிசார் விரைந்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு இருந்ததாக அந்த புளோக்கில் வசிப்பவர்கள் வான்பாவ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த உலோகத்தால் செய்யப்பட்ட சட்டி, பை ஆகியவற்றை போலிஸ் அதிகாரிகள் தங்களுடன் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

எட்டாவது மாடியில் வசிக்கும் ஆடவர், பெண், குழந்தை ஆகியோர் பற்றி போலிசார் தம்மிடம் விசாரித்ததாக அந்த புளோக்கில் வசிக்கும் 81 வயது திருவாட்டி ஹோங் வான்பாவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Loading...
Load next