‘புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி எதிர்பார்ப்பை மிஞ்சி செயல்படும்’

சிங்கப்பூரின் பிரச்சினைக்குரிய புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை எதிர்காலத்தில் எதிர்பார்ப்பையும் மிஞ்சி சிறப்பாகச் செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நம்பிக்கை தெரி வித்துள்ளார். 2024ஆம் ஆண்டில் செங்காங்-பொங்கோல் எல்ஆர்டிக்கு ஈடாக அது செயல்படும் என்று அவர் கூறினார்.

இருபது ஆண்டுகால புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையை எஸ்எம்ஆர்டி நிறுவனம் நடத்தி வருகிறது. 2015ல் 33,000 கார்-கிலோ மீட்டர் சேவை வழங்கியுள்ள அது, தாமதங்களுக்கு இடையே 64,000 கார்-கி.மீட்டர் தொலைவு சேவை வழங்கியுள்ளது.

இதனை குறிப்பிட்டுப் பேசிய உள்கட்டமைப்புக்கான ஒருங் கிணைப்பு அமைச்சருமான கோ, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி நிலையம் இன்னமும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றார்.

எஸ்பிஎஸ் இயக்கிவரும் பதினாறு ஆண்டுகள் பழமையான செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி சேவை தாமதங்களுக்கு இைடயே 300,000 கார்-கிலோ மீட்டர் தொலைவு சேவை வழங்கியுள்ளது.

புதுப்பிப்புப் பணிகள் 2024ஆம் ஆண்டில் முடிவடையும்போது செங்காங்-பொங்கோல் சேவைக்கு ஈடாக புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை செயல்படும் என்று அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரின் முதல் ஓட்டுநர் இல்லா இலகு ரயில் சேவையான புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை 1999ல் அறிமுகமானது.

வடக்கு-தெற்கு தடத்தில் புக்கிட் பாஞ்சாங்கிலிருந்து சுவா சூ காங்குக்குச் செல்லும் பயணிகளை அது இணைக்கிறது.

ஆனால் ஆரம்பத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டதால் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை மீதான நம்பகத்தன்மை குறைந்தது.

கடந்த ஆண்டுகளில் சேவைத் தடை, தொழில்நுட்பக் கோளாறு, மோதல், தீச் சம்பவம், அவசரகால பொத்தான் வேலை செய்யாதது, ரயில் சக்கரம் தடத்தைவிட்டு விலகியது, ரயில் நிலையங்களை தவறவிட்டுச் சென்றது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!