புலாவ் உபினில் சைக்கிள் உலா சென்ற பணிப்பெண்: 2 அறுவை சிகிச்சைகள், தீவிர சிகிச்சை

இரு நண்­பர்­க­ளோடு புலாவ் உபின் தீவில் செப்­டம்­பர் 27ஆம் தேதி சைக்­கிள் உலா சென்ற பிலிப்­பீன்ஸ் பணிப்­பெண் அசம்­பா­வி­தத்­தைச் சந்­திக்க நேர்ந்­தது. அதன் கார­ண­மாக பத்து நாட்­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

கலா­பினி மரி­லாவ் கார்­சியா, 50, எனப்­படும் அந்­தப் பெண்­ணின் மூளை­யில் வீக்­கம் காணப்­பட்­ட­தைத் தொடர்ந்து இரண்டு அறுவை சிகிச்­சை­கள் செய்­யப்­பட்­டன. அந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பொழு­தைக் கழிக்­கச் சென்­ற­போது அந்­தப் பெண்­ணுக்கு உண்­மை­யி­லேயே என்ன நடந்­தது என்­பது இன்­னும் தெளி­வாக்­கப்­ப­ட­வில்லை. கார­ணம் அவ­ரது நண்­பர்­கள் வேறு இடத்­தில் சென்று கொண்­டி­ருந்­த­னர். பாதை இறக்­கத்­தின் கீழ் வந்து பார்த்­த­போது தான் ஏதோ அசம்­பா­வி­தம் நடந்­தி­ருப்­ப­தாக அவர்­கள் சந்­தே­கித்­த­னர். தனது சைக்­கி­ளின் அருகே விழுந்து கிடந்­தார் குமாரி கார்­சியா.

“அப்­போ­து­கூட அவர் சுய­நி­னை­வோடு இருந்­தார். காயங்­களோ ரத்­தக்­க­சிவோ இல்லை. என்­னு­டைய மடி­யில் கிடத்தி வைக்­கப்­பட்டு இருந்­த­போது தலை­சுற்­று­வ­தாக கார்­சியா கூறி­னார்,” என நியூ பேப்­பர் செய்­தித்­தா­ளி­டம் பணிப்­பெண்­ணின் தோழி­யான கிளா­ரிசா ரிக்­டாவ் தெரி­வித்­தார்.

அவ்­வ­ழி­யாகச் சென்ற இரு­வர் உதவ முன்­வந்­த­தா­க­வும் பின்­னர் போலிஸ் அழைக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறிய அவர் போலிஸ் வரும் முன்­னரே கார்­சியா வாந்தி எடுத்­த­தா­கத் தெரி­வித்­தார். சுய­நி­னை­வோடு சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அந்­தப் பெண்­ணின் உடல்­நிலை திடீ­ரென மோச­ம­டைந்­த­தாக அவ­ரது வீட்டு முத­லா­ளி­யான திரு­வாட்டி ஜெனட் மோக் கூறி­னார்.

மூளை­யில் காய­ம­டைந்த பகுதி அப்பெண் வாய் பேச முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­த­லாம் என்­றும் நினைவை இழக்­கும் நிலை­யும் ஏற்­ப­ட­லாம் என­வும் மருத்­து­வர் கூறி­ய­தாக திரு­வாட்டி ஜெனட் தெரி­வித்­தார். 10 நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பெண் பின்னர் மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறி னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!