பிச்சினிக்காடு இளங்கோவிற்கு ஆனந்த பவன் புத்தகப் பரிசு

பிச்சினிக்காடு இளங்கோவிற்கு ஆனந்த பவன் புத்தகப் பரிசு

1 mins read
fd3bc383-3fa4-4703-a915-1d93b1bef018
-

ஆண்­டு­தோ­றும் ஆனந்­த­ப­வன் உண­வக ஆத­ர­வு­டன் சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் வழங்கி வரும் 2000 வெள்ளி மு.கு. இரா­மச்­சந்­திரா புத்­த­கப் பரிசு இந்த ஆண்டு, கவி­ஞர் பிச்­சி­னிக்­காடு இளங்கோ எழு­திய "அங்­கு­சம் காணா யானை " என்ற கவிதை நூலுக்கு வழங்­கப்­பட்­டது.

புத்­த­கப் பரி­சுத் திட்­டத்­தின் 11ஆவது ஆண்டு பரி­ச­ளிப்பு விழா கடந்த 28-11-2020, சனிக்­கி­ழ­மை­யன்று மாலை 5.30 மணிக்கு 'ஸும்' வலை­யொளி வாயி­லாக இணை­யத்­தில் நடை­பெற்­றது.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக் கழக இணைப்­பே­ரா­சி­ரி­யர் முனை­வர் சித்ரா சங்­க­ரன் வெற்­றி­யா­ள­ருக்கு புத்­த­கப் பரிசு வழங்கி, சிறப்­புரை ஆற்­றி­னார்.

சிங்­கப்­பூ­ரில் வெளி­யா­கும் தமிழ்ப் புத்­த­கங்­க­ளின் தரத்தை மேம்­ப­டுத்­தும் வகை­யில் ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்க வேண்­டும் என்­றும் ஆங்­கி­லத்­தி­லும் மற்ற மொழி­க­ளி­லும் உள்­ள­து­போல வெளி­யீட்­டுக்கு முன்­னரே விமர்­ச­னங்­கள், கருத்­து­களை கேட்­டுச் சரி­செய்­யும் முறை­யைப் பின்­பற்­ற­வும் முனை­வர் சித்ரா சங்­க­ரன் ஆலோ­சனை வழங்­கி­னார்.

2020ஆம் ஆண்­டின் புத்­த­கப் பரிசு தேர்­வுக் குழு­வில், இணைப்­பே­ரா­சி­ரி­யர் முனை­வர் ஆ ரா சிவ­கு­மா­ரன், தமி­ழ­கக் கவி­ஞர் தங்­கம் மூர்த்தி, மலே­சிய கவி­ஞர் முனை­வர் பச்­சை­பா­லன் ஆகி­யோர் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

போட்­டிக்கு 12 கவிதை நூல்­கள் கிடைக்­கப்­பெற்­றன.

சிறு­கதை, கவிதை, கட்­டுரை என சுழற்சி முறை­யில் நடை­பெ­றும் புத்­த­கப் பரிசு அடுத்த ஆண்டு கட்­டுரை நூலுக்கு வழங்­கப்­படும் எழுத்­தா­ளர் கழ­கம் தெரி­வித்­தது.

நிகழ்­வில் சிங்­கப்­பூர், இந்­தியா, மலே­சியா நாடு­களில் இருந்து பார்­வை­யா­ளர்­கள் பங்­கு­பெற்­ற­னர்.