விதிமீறல்கள்: 24 கடைகள், 24 பேருக்குத் தண்டனை

கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக கடந்த இரண்டு வாரங்­களில் 24 உணவு, பானக் கடை­க­ளுக்­குத் தண்­டனை கிடைத்­துள்­ளது.

அவற்­றில் கோப்­பி­தி­யாம், டெலி­ஃபி­ரான்ஸ் கடை­களும் அடங்­கும். கடை­களை மூடும்­படி 15 கடை­களுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

மற்­ற­வற்­றுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தாக நீடித்த, நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு தெரி­வித்­தது.

கொவிட்-19 விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றத் தவ­றி­ய­ 24 பேருக்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

கடந்த இரண்டு வார காலத்­தில் 1,000க்கும் மேற்­பட்ட இடங்­களில் சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 3,500க்கும் மேற்­பட்ட மக்­களும் விசா­ரிக்­கப்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது.

மவுண்ட்­பேட்­டன் ரோட்­டில் இருக்­கும் காத்­தோங் ஈட்­டிங் ஹவுஸ் என்ற உணவு, பான நிலையம் அக்­டோ­பர் 15 முதல் 24 வரை 10 நாட்­க­ளுக்கு மூடப்­பட்­டது.

அந்த நிலை­யம் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோரைப் பரி­சோ­தித்து அனு­ம­திக்­கும் நடை­முறை­யைப் பின்­பற்­ற­வில்லை.

ஒன்­பது கடை­க­ளுக்­குச் சம­ரச அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சர்க்­கு­லர் ரோட்­டில் செயல்­படும் 'பிங்க் வேல்' என்ற கடை உள்­ளிட்ட சில கடை­கள் மீண்­டும் குற்­றம் செய்­தன. அந்­தக் கடை நவம்­பர் 3 வரை 20 நாட்­க­ளுக்கு மூடப்­பட்­டது. விதி­மீறி நடந்­து­கொண்ட கில்­லினி ரோட்­டில் செயல்­படும் கோப்­பி­தி­யாம் அக்­டோ­பர் 25 வரை 10 நாட்­க­ளுக்கு செயல்­ப­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

உணவு, பான கடை­களில் அதி­கா­ரி­கள் தொடர்ந்து சோதனை கள் நடத்துவர் என்­றும் உறு­தி­யான அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!