இரட்டையர் உடல்கள் கிடந்த கால்வாயில் புலனாய்வு அதிகாரிகள்

அப்­பர் புக்­கிட் தீமா பகு­தி­யில் உள்ள கால்­வாய் ஒன்­றில் 11 வயது இரட்­டை­ய­ரின் உடல்­கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை கண்டு­எடுக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து நேற்று அந்­தக் கால்­வாய் பகுதியில் காவல்துறை புலனாய்வு அதிகாரி கள் சோதனையிட்­ட­னர். கிரீன்­ரிட்ஜ் கிர­செண்ட்­டில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே உள்ள அந்­தக் கால்­வாய்க்கு நேற்று பிற்­ப­கல் 2.15 மணி­ய­ள­வில் பலனாய்வு அதி­கா­ரி­கள் வந்­த­னர்.

சாதா­ரண உடை அணிந்­தி­ருந்த அவர்­கள், அந்­தப் பகு­தி­யைச் சுற்­றிப் பார்­வை­யிட்­ட­னர். அந்­தக் கால்­வாய்க்­குள் இறங்­கு­வ­தற்­கான பாதை­யைக் கண்­ட­றி­யும் பணி­யில் அவர்­கள் ஈடு­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

தாளில் குறிப்பு எடுத்­துக்­கொண்­டி­ருந்த அதி­கா­ரி­களில் ஒரு­வர், பின்­னர் கால்­வாய்க்­குள் இறங்­கி­னார். கால்­வாய் வழி­யாக உள்ள தடுப்­பு­வே­லிக்­கும் கான்­கி­ரீட் அடி­வா­ரத்­துக்­கும் இடை­யி­லான தூரத்தை அள­விட்­ட­தா­கத் தெரி­கிறது. பின்­னர், அங்­குள்ள தரை­வீ­டு­களுக்­குப் பக்­கத்­தி­லுள்ள ஒரு நடை­பாதை வழி­யாக அந்த அதி­கா­ரி­கள் சற்று தூரம் நடந்து சென்­ற­னர்.

ஏறக்­கு­றைய 10 நிமி­டங்­கள் கழித்து அந்த அதி­கா­ரி­கள் அங்­கி­ருந்து புறப்­பட்­ட­னர்.

அந்த இரட்­டைச் சகோ­த­ரர்­களின் உடல்­கள் நேற்று முன்­தி­னம் இரவு மண்­டாய் தக­னச் சாலை­யில் தக­னம் செய்­யப்­பட்­டன.

எஷ்டன் யாப் காய் ஷெர்ன், ஈதன் யாப் ஈ ஷெர்ன் இரு­வ­ர­து உடல்கள் இருந்த சவப்­பெட்­டிகளைத் தாங்­கிய இரு வாக­னங்­கள் இரவு 7.45 மணி­ய­ள­வில் மண்­டாய் தக­னச்­சா­லைக்கு வந்­தன. இரவு 8.15 மணிக்கு பௌத்த சமய வழி­பாடு நடந்­தது. தொடர்ந்து, இரவு 9 மணி­ய­ள­வில் உடல்­கள் தக­னம் செய்­யப்­பட்­டன. இரு­வ­ர­து உடல்­களும் ஒரே நேரத்­தில் தக­னம் செய்­யப்­பட்­ட­தாக இறு­திச் சடங்­கிற்கு ஏற்­பாடு செய்த திரு ஃபோங் சுன் சியோங் தெரி­வித்­தார்.

கடந்த சில நாள்­க­ளாக இரட்­டை­ய­ரின் உடல்­கள் பதப்­ப­டுத்­தப்­பட்டு வைக்­கப்­ப­டா­த­தால், நேரம் தாழ்த்­தா­மல் உடல்­க­ளைத் தக­னம் செய்­து­வி­டு­மாறு அந்த இரட்­டை­ய­ரின் குடும்­பத்­தா­ரி­டம் திரு ஃபோங் அறி­வு­றுத்தி இருந்­தார்.

இரட்­டை­யர்­க­ளு­டைய தந்­தை­யான 48 வயது சேவி­யர் யாப் ஜுங் ஹொவ்ன்ர் மீது நேற்று முன்­தி­னம் நீதி­மன்­றத்­தில் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

யாப்பை ஒரு­வா­ரத்­திற்கு விசா­ர­ணைக் காவ­லில் வைக்­க­வும் கூடு­தல் விசா­ர­ணைக்­காக அவ­ரைச் சம்­பவ இடத்­திற்கு அழைத்­துச் செல்­ல­வும் காவல்­துறை தரப்­பில் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

யாப்பின் வழக்கு ஜனவரி 31ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!