நாகேந்திரனின் மரண தண்டனையை நிறுத்த தாயார் எடுத்த இறுதிநேர முயற்சியும் தோல்வி

போதைப்­பொ­ருள் கடத்­தல் குற்­றத்­திற்­காக மலே­சி­ய­ருக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை நிறுத்­து­வ­தற்கான இறுதி முயற்­சி­யும் தோல்­வி­ய­டைந்­தது. நாகேந்­தி­ரன் கே. தர்­ம­லிங்கம் எனப்­படும் அந்த ஆடவருக்கு இன்று (புதன்­கி­ழமை) மரண தண்­டனை நிறை­வேற்ற நாள் குறிக்­கப்­பட்­டுள்­ளது.

2010ஆம் ஆண்டு தண்­டிக்­கப்­பட்ட நாகேந்­தி­ரன், எல்­லா­வி­த­மான சட்ட அம்­சங்­க­ளை­யும் பயன்­ப­டுத்தி­ விட்­டார். மரண தண்­டனை கடந்த ஆண்டு நவம்­பர் 10ஆம் தேதி நிறை­வேற்­றப்­பட இருந்த வேளை­யில் அதனை எதிர்த்து நாகேந்­தி­ரன் மேல்­மு­றை­யீடு மனு தாக்­கல் செய்­தார். அந்த மனு, நீதி­மன்ற நடை­மு­றையை அப்­பட்­ட­மாக மீறி­ய­தாக ஐந்து நீதி­ப­தி­க­ளைக் கொண்ட அமர்வு கூறி­யது. தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் தலை­மை­யி­லான அமர்வு, கடந்த மார்ச் 29ஆம் தேதி மனு­வைத் தள்­ளு­படி செய்­தது.

ஆகக் கடைசி முயற்­சி­யாக, நேற்று முன்­தி­னம் நாகேந்­தி­ர­னின் தாயார் திரு­மதி பாஞ்­சாலை சுப்­பி­ர­ம­ணி­யம் ஒரு மேல்­மு­றை­யீட்டு மனு­வைத் தாக்­கல் செய்­தார். அம்­

ம­னுவை மூன்று நீதி­ப­தி­க­ளைக் கொண்ட அமர்வு நேற்று தள்­ளு­படி செய்­தது. ஆண்ட்ரூ ஃபாங், ஜுடித் பிர­காஷ், பெலிண்டா ஆங் ஆகி­யோர் அந்த நீதி­ப­தி­கள்.

மனு மீதான விசா­ர­ணை­யில் நேற்று பங்­கேற்ற திரு­மதி பாஞ்­சாலை, "எனக்கு என் மகன் உயி­ரோடு வேண்­டும்," என்று உரை­பெ­யர்ப்­பா­ளர் மூலம் தமி­ழில் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்­கொண்­டார். வழக்­க­றி­ஞரை அமர்த்­த­வேண்டி இருப்­ப­தால் சிறிது அவ­கா­சம் தேவை என்­று அவர் விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

இறுதி மனுவும் தள்­ளு­படி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து தமது குடும்­பத்­தா­ரு­டன் இரண்டு மணி நேரம் செல­விட நாகேந்திரனுக்கு நீதி­மன்­றம் அனு­மதி வழங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!