‘தங்குவிடுதியைவிட்டு வெளியேற வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடை ஏதும் இல்லை’

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தொடர்ந்து முடக்­க­நி­லை­யில் தவித்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக பிரிட்­ட­னின் 'ஃபைனான்சியல் டைம்ஸ்' (எஃப்டி) நாளி­தழ் வெளி­யிட்ட செய்தி தொடர்­பாக லண்­ட­னில் உள்ள சிங்­கப்­பூ­ரின் தூதர் அதற்­குப் பதி­ல­ளித்­துள்­ளார்.

"உங்­க­ளின் நிரு­ப­ரி­டம் கூறி­யதுபோல, தற்­போது தங்­க­ளின் தங்­கு­வி­டு­தியை விட்டு வெளி­யேற விரும்­பும் வெளி­நாட்டு ஊழி­யர் எவ­ருக்­கும் தடை விதிக்­கப்­ப­ட­வில்லை," என்று திரு லிம் துவான் குவான் எழு­திய கடி­தம் 'எஃப்டி'யில் நேற்று முன்­தி­னம் வெளி­யா­னது.

சமூக இடங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான விண்­ணப்­பங்­களை ஊழி­யர்­கள் சமர்ப்­பித்­தால் அவற்­றுக்கு உட­ன­டி­யாக ஒப்­பு­தல் அளிக்­கப்­படு­வ­தா­க­வும் இம்­மாத இறு­தி­யில் மேலும் அதி­க­மான விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்­றும் அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரில் வாழும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பல­ரது சுதந்­தி­ரம், தொடர்ந்து பல­வாறு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக இம்­மா­தம் 7ஆம் தேதி­யன்று செய்தி ஒன்றை 'எஃப்டி' வெளி­யிட்­டி­ருந்­தது.

செய்தி அறிக்­கை­யில் குறிப்­பிட்டு இருந்­த­தற்கு மாறாக, கொள்­ளை­நோ­யில் சிக்­கி­யி­ருந்த கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் மீது காட்­டிய அதே அக்­க­றையை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மீதும் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் காட்­டி­ய­தாக திரு லிம் தம் பதில் கடி­தத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார். குடி­மக்­க­ளுக்­குத் தடுப்­பூ­சி­கள் வழங்­கப்­பட்ட அதே கால­கட்­டத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் அந்த வாய்ப்பு கிடைத்­ததை திரு லிம் சுட்­டி­னார்.

வரும் 24ஆம் தேதி­மு­தல் சமூக இடங்­க­ளுக்­குச் செல்­வ­தற்கு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் விண்­ணப்­பிக்­கத் தேவைப்­ப­டாது என்று கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அறி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!