உட்லண்ட்சில் திடீரென்று தீப்பிடித்த இறுதிச் சடங்கு ஊர்தி

உட்­லண்ட்­சில் நேற்று முன்­தி­னம், இறு­திச் சடங்கு வாக­னம் ஒன்­றில் தீப்­பி­டித்­தது.

அரண்­ம­னை­யைப் போன்று அலங்­க­ரிக்­கப்­பட்ட அந்த வாக­னத்­தில் சீனப் பாரம்­ப­ரிய வடி­வி­லான கூரை­யும் அழ­கிய தொங்கு விளக்­கு­களும் பொருத்­தப்­பட்டிருந்தன.

சம்­ப­வம் செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் 3.50 மணி­ய­ள­வில், உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 31ன் புளோக் 313க்கு அரு­கில் உள்ள கார் நிறுத்­தும் இடத்­தில் நடந்­தது.

மாது ஒரு­வ­ரின் இறு­திச் சடங்கு நடை­பெற்ற இடத்­தில் அந்த வாக­னம் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக ஷின் மின் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

அங்­கி­ருந்த ஆட­வர்­கள் சிலர், வாளி­களில் தண்­ணீரை ஊற்றித் தீயை அணைத்­தனர். இறு­திச் சடங்­குக்­காகப் பின்­னர் வேறு ஒரு வாக­னம் வர­வ­ழைக்­கப்­பட்­டது.

தீய­ணைப்­புப் படை­யி­னர் சம்­பவ இடத்­துக்­குச் செல்­லும் முன்பே தீ அணைக்­கப்­பட்டடுவிட்ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. புளோக் 313ல் வசிக்­கும் திரு­வாட்டி லெட்­சுமி, கார் நிறுத்தும்­இடத்­தில் புகை கிளம்­பி­ய­தைப் பார்த்­த­தும் அதிர்ச்சி அடைந்­த­தா­க­வும் விரை­வில் தீ அணைக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறி­னார்.

தீ மூண்­ட­தற்­கான கார­ணம் குறித்து சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை விசா­ரித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!