தகுந்த பயிற்சியுடன் பிறரைக் காக்க முடியும் - விளம்பரச் செய்தி

திருவாட்டி மு.ஞானம்மாள் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தவர். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட இத்தலைமுறையினர் சமூக உணர்வு மிக்கவர்கள், கூட்டுச் சமூகமாக வாழும் கம்பத்து வாழ்க்கையை அனுபவித்தவர்கள்.

சுமார் ஈராண்டுகளுக்கு முன்னர் எஸ்எம்ஆர்டி ரயிலில் மூத்த மகன் கிரன் பாலகிருஷ்ணனுடன் பயணம் செய்துகொண்டிருந்தார் திருவாட்டி ஞானம்மாள். அப்போது அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு மலாய் முதியவரின் வாயிலிருந்து எச்சில் ஊறுவதை அவர் பார்த்தார்.

அந்த ஆடவர் இருக்கையில் இருந்து எழுந்தபோது, திடீரென்று மயங்கிக் கீழே விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் பதற்றம் அடைய, நிதானத்தைக் கடைப்பிடித்து செயலில் இறங்கினார் திருவாட்டி ஞானம்மாள். அவசர மருத்துவ வாகனத்தை அழைக்குமாறு அருகில் நின்ற பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ரயில் பூன் லே எம்ஆர்டி நிலையத்தை அடைந்ததும் ஞானம்மாளின் மகனும் அந்த மலாய் ஆடவரின் குடும்பத்தினரும் அவரை ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர்.

ஆடவரின் தோளை லேசாகப் பிடித்து திருவாட்டி ஞானம்மாள் தட்டி பார்த்து நலம் விசாரித்தார். ஆடவர் பதிலளிக்கச் சிரமப்பட்டார். அவரின் நாடியைப் பிடித்து பார்த்தார். சீராக இருந்தது. கண்களில் எந்தவிதமான ஆபத்தான அறிகுறிகளும் தென்படவில்லை.

அவரின் இடது கையையும் காலையும் தூக்கிப் பார்க்க முனைந்தபோது அவரால் அசைவுகளை உணர முடியவில்லை என்பதை திருவாட்டி ஞானம்மாள் உணர்ந்தார்.

அச்சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த அவசர மருத்துவ உதவியாளர்களிடம் நிலைமையை விவரித்தார் திருவாட்டி ஞானம்மாள். ஆடவருக்கு பக்கவாதம் தாக்கியிருப்பது அறியப்பட்டது.

பூன்லே சமூக மன்ற C2E எனும் சமூக அவசரநிலை, ஈடுபாட்டுக் குழுவில் பல ஆண்டுகளாக சேவை ஆற்றி வருகிறார் திருவாட்டி ஞானம்மாள். இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கும் உயிர்க்காப்பு உத்திகளை இவர் முறையாக கற்றுக்கொண்டவர்.

தக்க நேரத்தில் ஆடவருக்கு உதவிபுரிய முன்வந்த திருவாட்டி ஞானம்மாளுக்கும் அவரது மகனுக்கும் அவ்வாண்டு குடிமைத் தற்காப்புப் படையின் பொதுநல உணர்வுமிக்க செயலுக்கான விருது வழங்கப்பட்டது.

உயிர் காக்கும் திறன்களை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருவாட்டி ஞானம்மாள், அந்த உத்திகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால் தமது கணவரை 24 ஆண்டுகளுக்கு முன் காப்பாற்றியிருக்கலாம் என வருத்தத்துடன் கூறினார்.

அவரது கணவருக்கு அப்போது காய்ச்சலுடன் இருமலும் இருந்தது. திடீரென உடல் வியர்க்கத் தொடங்க, அவரை உடனே மருத்துவமனைக்கு டாக்சியில் அழைத்துச் சென்றார். எனினும், அவரைக் காப்பற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு அறிகுறிகளை திருவாட்டி ஞானம்மாளுக்கு அப்போது அடையாளம் காணத் தெரியவில்லை.

இந்த நிலைமை பிறருக்கு வரக்கூடாது எனும் எண்ணத்தில் இவர் சமூக மன்றத்தில் முதலுதவி, இதய இயக்க மீட்பு சிகிச்சைமுறை (CPR), தானியங்கி வெளிப்புற இதய இயக்கு கருவி (AED) போன்ற உத்திகளை முறையாக கற்றுக்கொண்டார்.

பெரிய அளவில் நடக்கும் சமூக நிகழ்ச்சிகளில் தொண்டூழியராகப் பிறருக்கு உதவிக் கரம் நீட்ட எப்போதும் தயாராக உள்ளார் 64 வயது திருவாட்டி ஞானம்மாள்.

இருபது ஆண்டுகளுக்கு மேலான தொண்டூழிய அனுபவத்தில் திருவாட்டி ஞானம்மாள் பொது மக்கள் பலருக்கும் முதலுதவி புரிந்து உதவியுள்ளார்.

முதலுதவி செய்வதை ஒரு பொதுச் சேவையாக கருதும் திருவாட்டி ஞானம்மாள், தன் குடும்பத்தினரையும் மற்றவர்களையும் முதலுதவியில் பயிற்சி பெற ஊக்குவிக்கிறார். அவரது இரு மகன்களும் இந்த உயிர்க்காப்பு உத்திகளை தங்களது வேலையிடத்திலும் சமூக மன்றத்திலும் முறையாகக் கற்றுக்கொண்டுள்ளனர். தற்போது பூன் லே சோன் ‘எச்’ வசிப்போர் குழுவின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர், சமூக மன்ற நிகழ்ச்சிகளில் பலரையும் இந்த உயிர்க்காப்பு உத்திகளை கற்றுக்கொள்ள ஊக்குவித்து வருகிறார்.

‘‘வருமுன் காப்பதே உகந்ததாகும். நாளை நாம் காப்பாற்றும் ஒருவர் நமது குடும்ப உறுப்பினராகவும் இருக்கலாம்,’’ என்று குறிப்பிட்டார் திருவாட்டி ஞானம்மாள். இந்திய சமூகத்தினரிடையே உயிர்க்காப்பு உத்திகள் குறித்த விழிப்புணர்வு வர வேண்டும், அவற்றை கற்றுக்கொள்ளவும் அவர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!