இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி

கான்பூர்: இந்தியா அதன் 500வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற் றுள்ளது. கான்பூரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 318 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 262 ஓட்டங் கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 56 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 377 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் நியூசிலாந்துக்கு சவால்மிக்க 434 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

ரோஞ்சி 38 ஓட்டங்களும் சான்ட்னர் 8 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தோல்வியைத் தவிர்க்க மேலும் 340 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 6 விக்கெட்டு களுடன் நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.

நியூசிலாந்தின் கடைசி விக்கெட் சாய்ந்ததும் வெற்றிக் களிப்பில் கொண்டாடும் இந்திய வீரர்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி