இங்கிலாந்தைக் காப்பாற்றிய ஜோ ஹார்ட்

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று காற்­பந்து ஆட்டம் ஒன்றில் ஸ்லோ­வே­னியா=இங்­கி­லாந்து அணி­கள் மோதின-. இந்த ஆட்டத்தில் இரு அணி­களுமே கோல் எதுவும் போடா­த­ நிலையில் ஆட்டம் சம­நிலை­யில் முடிந்தது. இரு அணி­களுமே முற்பாதி ஆட்­டத்தை­விட பிற்பாதி ஆட்­டத்­தில்­தான் கோல் போடு­வதற்­கான முயற்­சி­களை அதிகம் மேற்­கொண் ட­ன. இருப்­பி­னும் ஆட்டம் முழு­வ­தும் இங்­கி­லாந்து மூன்று முறை மட்டுமே கோல் போடும் முயற்­சியை மேற்­கொண்டது. இதற்­கிடையே, இங்­கி­லாந்து அணியின் கோல் காப்­பா­ளர் ஜோ ஹார்ட் ஸ்லோ­வே­னி­யா­வின் கோல் போடும் இரண்டு முயற்­சி­களைத் தடுத்­தார். குறிப்­பாக, ஸ்லோ­வே­னி­யா­வின் ஜஸ்மின் குர்திக் உதைத்த பந்தைக் கோலாக விடாமல் சிறப்­பா­கத் தடுத்து விளை­யா­டிய அவர் இங்­கி­லாந்தைத் தோல்­வி­யில் இருந்து காப்­பாற்­றினார்.

இறு­தி­யில் ஆட்டம் சம­நிலையில் முடிய, 7 புள்­ளி­களு­டன் ‘எஃப்’ பிரிவில் இங்­கி­லாந்து முத­லி­டத்­தில் உள்ளது. ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தகுதிச் சுற்றில் 14 ஆட்­டங்க­ளாக பெற்று வந்த தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஐந்து புள்ளிகளுடன் ஸ்லோவேனியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அலர்டைஸ் நீக்­கப்­பட்­ட பிறகு, நான்கு ஆட்­டங்களுக்கு நிர்­வா­கி­யாக பொறுப்­பேற்­றுள்ள சௌத்கேட் மால்­டா­விற்கு எதிரான ஆட்­டத்தை வென்ற பிறகு, ஸ்லோவே­னி ­யா­வுக்கு எதிரான ஆட்­டத்­தில் ரூனிக்­குப் பதிலாக டோட்­டன்­ஹம் வீரர் எரிக் டியரை கள­மி­றக்­கினார். ஆனால் ஆட்டம் முடிய சுமார் 20 நிமி­டங்கள் இருந்த­போது ரூனி மாற்று ஆட்­டக்­கா­ர­ராக கள­மி­றக்­கப்­பட்­டார். அதன்­பி­றகு, ஸ்லோ­வே­னியா கோல் காப்­பா­ளரைத் தாண்டி கோல் போட அவர் மேற்­கொண்ட முயற்சி வீணானது.

ஸ்லோவேனியா வீரர் உதைத்த பந்தைக் கோலாகவிடாமல் தடுத்து விளையாடிய இங்கிலாந்து கோல் காப்பாளர் ஜோ ஹார்ட்.  படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை