ஆர்சனலை உயர்த்திய அலெக்சிஸ்

லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத் தில் தொடர்ந்து 13 ஆட்டங்களாக தோல்வி காணாது, அசைக்க முடியாத குழுவாக ஆர்சனல் திகழ்ந்து வருகிறது. வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவிற்கு எதிராக நேற்று அதி காலை நடந்த ஆட்டத்தில் அலெக்சிஸ் சான்செஸ் ஹாட்ரிக் கோலடிக்க, 5-1 என்ற கோல் கணக்கில் அக்குழு மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் தானே கோலடிக்க வாய்ப்பிருந்தும் சான்செஸ் தன்னலம் கருதாது பந்தை ஓஸிலிடம் கடத்த, அவர் அதை மிக எளிதாக வலைக்குள் தள்ளி ஆர்சனலின் கோல் வேட் டையைத் தொடங்கி வைத்தார்.

வெஸ்ட் ஹேம் யுனைடெட் காற்பந்துக் குழுவிற்கெதிராக லண்டன் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மூன்று கோல்களைப் புகுத்தி ஆட்ட நாயகனாக மிளிர்ந்தார் ஆர்சனல் குழுவிற்காக விளையாடிவரும் சிலி நாட்டு வீரர் அலெக்சிஸ் சான்செஸ் (இடது). படம்: ஏஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!