கோஹ்லி: இது ஆரம்பம்தான்

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் உலகின் முதல் நிலை அணியான இந்தியா கடை சியாகத் தான் ஆடிய 18 ஆட்டங் களில் தோல்வியே காணாமல் புதிய சரித்திரம் படைத்துள்ளது. இதற்குமுன் செப்டம்பர் 1985 முதல் மார்ச் 1987 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து 17 ஆட்டங்களாக வீழ்த்தமுடியாத அணியாகத் திகழ்ந்ததே இந்திய கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் முந்தைய சாதனையாக இருந்தது. அண்மையில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரை விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4-0 எனக் கைப் பற்றியது.

இதையடுத்து, இதற்குமுன் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணியின் தலைவர் என்ற பெருமை விராத் கோஹ்லியைச் சென்றடைந்து இருக்கிறது. இந்த வெற்றிப் பயணம் முதல்படிதான் என்றும் இந்த நல்ல அடித்தளத்துடன் வரும் ஆண்டு களிலும் பல வெற்றிகளைக் குவித்துச் சாதிக்க ஆர்வமாக இருக்கிறோம் என்றும் கோஹ்லி கூறியிருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!