செல்சிக்கு வேகத் தடை போட்ட ஸ்பர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்து வந்த செல்சியை ஸ்பர்ஸ் குழு வீழ்த்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் செல்சியை 2=0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் தோற்கடித்தது. இதன் விளைவாகத் தொடர்ந்து 14வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைக்க ஆவலுடன் காத்திருந்த செல்சியின் கனவு கலைந்தது. தோல்வியைத் தழுவி மூன்று புள்ளிகளைக் கோட்டைவிட்ட போதிலும் இரண்டாவது இடத்தில் இருக்கும் லிவர்பூலைவிட செல்சி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரண்டு குழுக்களும் கோல் வேட்டையில் மும்முரமாக இறங் கின. ஆனால் இடைவேளைக்குச் சில வினாடிகளே இருந்தபோது செல்சியின் பெனால்டி எல்லைக் குள் ஸ்பர்சின் கிறிஸ்டியன் எரிக்சன் பந்தை அனுப்பினார்.

ஸ்பர்ஸ் குழுவின் இரண்டாவது கோலைப் போடும் டெலி அலி (இடமிருந்து இரண்டாவது) படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!