ரஷ்யா, கத்தார் நிம்மதிப் பெருமூச்சு

ஸுரிக்: ரஷ்யாவும் கத்தாரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்தத் தடை விதிப்பது குறித்து அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பின் (ஃபிஃபா) அறிக்கையில் எதுவும் இடம் பெறாததால் அந்த நாடுகள் நிம்மதியடைந்துள்ளன. 2010 டிசம்பர் மாதம் ஸ`ரிக்கில் நடந்த ரகசிய வாக்கெடுப்பின்மூலம் 2018 உலகக் கிண்ணத் தொடரை ரஷ்யாவும் 2022ஆம் ஆண்டுக்கான போட்டிகளை கத்தாரும் ஏற்று நடத்தும் வாய்ப்பைப் பெற்றன. ஆயினும், ஃபிஃபா செயற் குழு உறுப்பினர்கள் 22 பேரின் வாக்குகளைப் பெற அந்த நாடுகள் முறைகேடான வழிகளைக் கையாண்டதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அது பற்றி ஃபிஃபாவின் அப்போதைய அறவியல் புலனாய்வாளர் மைக்கல் கார்சியா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. தமது அறிக்கையை 2014லேயே அவர் சமர்ப்பித்தபோதும் இப்போதுதான் அவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon